விரைவில் இந்தியாவில் : பொடி வைக்கும் ஹானர்.!!

Written By:

ஹூவாய் நிறுவனத்தின் பிரபல பிரான்ட் ஹானர், ஸ்மார்ட்போன் சந்தையைத் திரும்பி பார்க்கும் விதமாகத் தனது கருவிகளில் அட்டகாசமான சிறப்பம்சங்கள் மற்றும் அதிர்ச்சிகரமான விலையில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஹானர் பிரான்ட் கொண்ட புதிய கருவிகள் இந்தியாவில் இன்று வெளியாகின்றன. அதன் படி இந்நிறுவனம் டேப்ளெட் கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

ஹானர் புதிய டேப்ளெட் கருவியானது 4100 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அதிக நேர பேக்கப் வழங்கும் என்றும் இந்தக் கருவியில் 3ஜி காலிங் மற்றும் வீடியோ ப்ளேபேக் வழங்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.

02

பெரிய திரை கொண்ட கருவிகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு டேப்ளெட் கருவிகள் சிறப்பானதாக இருப்பதோடு லேப்டாப் கருவிகளை விடக் கச்சிதமாகவும் இருக்கும்.

03

செய்தித் தாள், வீடியோ பார்ப்பது மற்றும் வீடியோ கேம் போன்ற வசதிகளை ஒற்றைக் கருவியில் வழங்கும் கருவியாக டேப்ளெட்கள் விளங்குகின்றது.

04

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் அளவில் இல்லாமல் சற்றே சிறியதாக இருக்கும் கருவிகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாக சந்தையில் பேப்ளெட் கருவிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

05

இந்தியா மற்றும் சர்வதேச அளவிலும் வாடிக்கையாளர்களுக்குப் பயன் தரும் பல்வேறு கருவிகளை அறிமுகம் செய்து வரும் ஹானர் டேப்ளெட் கருவியை வெளியிட இருப்பது டிஜிட்டல் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Honor Rumored to Debut in the tablet category in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்