ஃபேஸ்புக் மெசன்ஜர் : யாரும் அறிந்திராத ரகசிய அம்சங்கள்.!!

Written by: Aruna Saravanan

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை மாதத்திற்கு 800 மில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அனைத்து வித மொபைல் தேவைகளுக்கும் மெசன்ஜர் செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜரில் நீங்கள் அறிந்திராத சில பயன்பாடுகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். ஃபேஸ்புக் மெசன்ஜர் பயன்படுத்துபவர்கள் ஸ்லைடர்களில் வழங்கப்பட்டிருக்கும் சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்டான்டு அலோன் வெப்சைட்

ஃபேஸ்புக்கில் நியூஸ் ஃபீடிஇன் தலையிடுதல் இல்லாமல் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாட முடியும். செயலியை போல் இது மிகவும் சுத்தமாகவும் எளிமையாகவும் இருக்கும். ஆனால் இது இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

ஃபேஸ்புக் தேவையில்லை

உங்களிடம் ஃபேஸ்புக் கணக்கு இல்லையென்றால் நீங்கள் "Not on Facebook" என்பதை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். இந்த செயலியையும் அதன் அம்சத்தையும் எடுத்து கொள்ள மெசன்ஜர் செயலியை பயன்படுத்துங்கள்.

யுபெரை கோரவும்

மெசன்ஜர் மூலமாக நீங்கள் யுபெர் காரை புக் செய்ய முடியும். உரையாடளுக்கு உள்ளே மோர் ஐகானை தேர்வு செய்து டிரான்ஸ்போர்டேஷனை டேப் செய்யவும். நீங்கள் அங்கிருந்து லாக் இன் செய்து யுபெரை கோர வேண்டும்.

க்ரூப் பின்

நீங்கள் ஒரே குழுவுடன் சாட் செய்தால், உரையாடலை பின் செய்ய முடிந்தால் தேடுவதற்கு நீங்கள் ஸ்க்ரோல் செய்ய தேவையில்லை. செயலியின் கீழ் உள்ள க்ரூப் பொத்தான் மீது க்ளிக் செய்தால் மேலே ஓரத்தில் இடது பக்கத்தில் பின் பொத்தானை காண்பீர்கள்.

ம்யூட்

ஒரு குறிப்பிட்ட உரையாடலை மெசேஜின் மேல் உள்ள பெயரை க்ளிக் செய்து ம்யூட் செய்யவும். நீங்கள் ம்யூட் செய்ய வேண்டிய நேரம், காலம் மற்றும் நோட்டிபிகேஷனையும் தேர்வு செய்யவும்.

கட்டணம் செலுத்தலாம்

உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் pay செய்வதற்கென்று சில செயலிகள் உள்ளன. ஆனால் உங்கள் போனில் போதிய இடம் இல்லையென்றால் கவலை வேண்டாம் மெசன்ஜர் உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு இதன் மூலம் பணம் இல்லாமலேயே கட்டணம் செலுத்த முடியும்.

ஃபேஷியல் ரிகஃக்னீஷன்

உங்கள் நண்பர்களுக்கு சுலபமாக போட்டோக்களை அனுப்ப மெசன்ஜர் செயலி உதவுகின்றது. இந்த போட்டோ மேஜிக் அம்சமானது ஃபேஷியல் ரிகஃக்னீஷன் ( facial recognition ) பயன்படுத்துகின்றது. இந்த செயலி போட்டோவை ஷேர் செய்ய உதவுகின்றது. உங்கள் கேமரா ரோலில் உங்கள் நண்பருடன் புதிய படம் வந்தால் இது உங்களுக்கு நோட்டிஃபை செய்கின்றது.

உங்கள் இடத்தை பகிரலாம்

மற்ற குறுந்தகவல் செயலியை போன்று இதிலும் உங்கள் லொகேஷனை பகிர முடியும். இதில் வரும் அம்சமானது உங்கள் லொகேஷனை தெரியப்படுத்தவும், அல்லது ஒரு இடத்தை தேடவும் பயன்படுகின்றது.

GIFs

உங்கள் செயலியில் உரையாடலின் கீழ் பல முறை டேப் செய்யவும். அதில் பலவித செயலிகள் உங்களுக்கு கிடைக்கும். அவற்றை GIPHY நிறுவி கொள்ள முடியும். நிறுவியவுடன் உரையாடலின் கீழ் உள்ள GIF ஐகானை தேர்ந்தெடுத்து GIFஐ தேடி மெசன்ஜருக்கு நேராக அனுப்பலாம்.

கஸ்டமைஸ்

மெசேஜ் த்ரெட்ஸ் ( Message threads ) இருப்பதை போன்று நீங்கள் கஸ்டமைஸ் ( customize ) செய்யலாம். நீங்கள் உரையாடலில் இருக்கும் போது திரையின் மேல் உங்கள் நண்பர்களின் பெயரின் மேல் nicknames, color மற்றும் emojiக்கு என்று ஆப்ஷன்களை காண முடியும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Hidden Tips And Tricks for Facebook Messenger. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்