உயிரை காப்பாற்றும் 'மறைக்கப்பட்ட' ஐபோன் அம்சம்..!!

Written By:

சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை மொபைல் முதல் அதிக விலை கொண்ட மொபைல் கருவிகள் என அனைத்திலும் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டிருக்கும். இந்த அம்சத்தை பயன்படுத்தி அவசர காலத்தில் உறவினர் மற்றும் நண்பர்களை உதவிக்கு அழைக்க முடியும். இந்த அம்சம் அனைத்து கருவிகளில் இருந்தாலும், சில கருவிகளில் லாக் செய்யப்பட்டிருக்கும் போது எவ்வித கான்டாக்ட்களையும் பார்க்க முடியாது.

மறைக்கப்பட்ட ஐபோன் அம்சமானது அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பரை பார்க்க வழி செய்கின்றது. இதோடு உதவி தேவைப்படுவோரின் மருத்துவ குறிப்புகளையும் பார்க்க வழி செய்கின்றதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் கருவிகளில் பயனர்களின் உயிர் காக்கும் அம்சமாக இது விளங்குகின்றது என்றும் கூற முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

எமர்ஜென்சி

ஐபோனில் மெடிக்கல் ஐடியை லாக் ஸ்கிரீனிலேயே இயக்க முடியும். இதை இயக்க இடது புறத்தில் இருக்கும் எமர்ஜென்ஸி பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

மெடிக்கல் ஐடி

ஐபோன் கருவியில் மெடிக்கல் ஐடி இப்படி தான் இருக்கும். இந்த பட்டன் லாக் ஸ்கிரீனில் இருந்து நேரடியாக தெரியும் என்பதால் தேவையான தகவல்களை மட்டும் இங்கு பதிவு செய்யுங்கள்.

கான்டாக்ட்

இங்கு உங்களது நண்பர் மற்றும் உறவினர்களின் கான்டாக்ட்களோடு பல்வேறு பயனுள்ள தகவல்களை பதிவு செய்ய முடியும்.

மாற்றம்

மெடிக்கல் ஐடியில் ஏதேனும் தகவல்களை மாற்ற வேண்டும் எனில் ஹெல்த் அப்ளிகேஷனினை க்ளிக் செய்து தேவையான மாற்றங்களை செய்ய முடியும்.

ஹெல்த் ஆப்

ஹெல்த் அப்ளிகேஷனில் மாற்றங்கள் செய்யும் போது ஒன்றுக்கும் அதிகமான கான்டாக்ட்களை பதிவு செய்வதோடு அவர்களின் உறவு முறையையும் பதிவு செய்ய முடியும். இதனால் அவசர காலத்தில் சரியான நபரை தொடர்பு கொள்வது எளிமையாகும்.

பாதுகாப்பு

மெடிக்கல் ஐடியில் தெரியும் அனைத்து தகவல்களையும் உங்களால் மாற்றியமைக்க முடியும் என்பதோடு இங்கு பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றது. இங்கு பதிவு செய்யப்படும் தகவல்கள் எக்காரணத்தை கொண்டும் மற்ற செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது என்கின்றது ஆப்பிள் நிறுவனம்.

அழித்தல்

மெடிக்கல் ஐடியில் நீங்கள் பதிவு செய்யும் தகவல்களை எந்நேரத்திலும் முற்றிலுமாக அழிக்கவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here the Hidden iPhone Feature that Could Save Your Life One Day. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்