ஏர்டெல் இனி இலவச வரம்பற்ற அழைப்புகளை அளிக்காது. ஏன்.?

ஏர்டெல் சமீபத்தில் அதன் இலவச குரல் அழைப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. எனினும், அது ரிலையன்ஸ் ஜியோ போன்று முற்றிலும் இலவசமான சேவை அல்ல.

Written By:

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஒவ்வொரு நாளும் சூடாகும் கட்டண போர் நடந்து கொண்டிருக்கிறது என்பதில் எந்த விதமான ஒளிவு மறைவுமில்லை.

ரிலையன்ஸ் ஜியோ சந்தைக்குள் நுழைந்து அட்டகாசமான மற்றும் ஆக்கிரமிப்பு சேவைகளை வழங்கத் தொடங்கியதுமே கிட்டத்தட்ட அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் பல கவர்ச்சிகரமான மற்றும் நுழைவு நிலை கட்டண திட்டங்களை அவரவர்களின் பயனர்களுக்கு வாரி வழங்கின.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நாட்டின் "சிறந்த" சேவை வழங்குநர்

இந்த போட்டியில் அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களின் மத்தியிலும் பார்தி ஏர்டெல் முன்னணி வகித்து நாட்டின் "சிறந்த" சேவை வழங்குநர் என்ற பெயரை தக்கவைத்துக்கொண்டது. இனி ஏர்டெல் தான் தான் சிறந்தது என்பதை நிரூபிக்க முன்னெடுக்க எதுவுமில்லை.

குறிப்பிட்ட காரணங்கள்

அதாவது ஏர்டெல் நிறுவனம் இனி இலவச மற்றும் வரம்பற்ற அழைப்புகளை தனது பயனர்களுக்கு அளிக்க வேண்டியதில்லை, அதற்கு சில குறிப்பிட்ட காரணங்களும் உண்டு. அவைகள் என்ன.?

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தொடராது

ஜியோவுடன் ஆன போட்டியில் பார்தி ஏர்டெல் சமீபத்தில் பல்வேறு நுழைவு நிலை கட்டண திட்டங்களில் தனது பயனர்களுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புகளை வழங்கியது. ஏர்டெல் அதன் சொந்த நெட்வொர்க்கை ஜியோ போன்ற சேவை வழங்குநர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே அதன் பயனர்களுக்கு இலவச குரல் அழைப்பு சேவையை வழங்க தொடங்கியது. எனினும், ஏர்டெல் வழங்கிய இந்த சேவை மென்மேலும் தொடராது.

"அன்போடு" காத்திருக்காது

ஏர்டெல் இனி இலவச வாய்ஸ் கால்களை வழங்காது என்று பயனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி"கொடூரமான போட்டி சந்தை" என தொலைத் தொடர்புத் துறையை குறிப்பிட்டுள்ளார் மற்றும் பிற தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் தங்களுக்கு கீழே தான் உள்ளன, ஆக ஏர்டெல் "அன்போடு" மற்ற தொலைதொடர்பு நிறுவனம் மேலே வர காத்திருக்காது என்றும் கூறியுள்ளார்.

"இலவச" சேவை

இலவச குரல் அழைப்புகள் வழங்காவிட்டாலும் தொலை தொடர்பு ஆப்ரேட்டர் சில சுவாரஸ்யமான எதிர்கால கட்டண விலை குறைப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது உள்ளது. அதாவது, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எந்த "இலவச" சேவைகளையும் வழங்காமல் அதற்கு பதிலாக ஒரு குறைந்த விகிதத்திலான சேவையை வழங்க உள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Here's Why Airtel Will No Longer Offer Free and Unlimited Voice Calls. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்