வாட்ஸ்ஆப் : அடுத்த செக்யூரிட்டி அப்கிரேட்டில் நமக்கு என்னென்ன கிடைக்கும்..?

வாட்ஸ்ஆப் ஒரு பயனுள்ள முறையில் பயனர்களின் அக்கவுண்ட், தகவல்களை பாதுகாக்கும் நோக்கத்தில் மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் இருந்து விடுபட உதவும் புதிய பாதுகாப்பு அம்சங்களை வழங்க திட்டமிடுகிறது.

Written By:

அனைவருக்கும் மிகவும் பிடித்த மெஸேஜிங் தளமான வாட்ஸ்ஆப் சமீபத்தில் பல புதிய அம்சங்களை பயனர்களின் தக்கவைப்பு மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவந்தது.

குறிப்பாக சமீபத்தில் வாட்ஸ்ஆப் , ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் ஆகிய இருவருமே மிகவும் எதிர்பார்த்த வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியது. உடன் புதிய டூடுல் , கிப் ஆகிய பிற அம்சங்களையும் பயனர்களின் உரையாடலை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றும் நோக்கத்தில் அறிமுகம் செய்தது.

இந்த புதிய அம்சங்கள் தவிர்த்து வாட்ஸ்ஆப் அதன் பாதுகாப்பு நிலையில் புதிய அம்சங்களை சேர்க்க திட்டமிட்டு வருகிறது அவைகள் என்னென்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

யூசர் செக்யூரிட்டி

யூசர் செக்யூரிட்டியை மேம்படுத்த, மற்றொரு புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் தொடங்க தயாராக உள்ளது. அதாவது டூ பேக்டர் ஆத்தன்டிகேஷன் அம்சத்தை கொண்டு வர உள்ளது இது எந்த வகையான பாதுகாப்பு கவலைகளும் இன்றி பயனர்களை தங்கள் கணக்குகளை தாராளமாக உபயோகிக்க உதவும்.

டூ பேக்டர் ஆத்தன்டிகேஷன்

இந்த வாட்ஸ்ஆப் பாதுகாப்பு நிலை மேம்படுத்தல் பற்றிய தகவல்கள் ஒரு ஸ்பானிஷ் வலைத்தளத்தின் வழியாக கசிந்துள்ளது. இந்த டூ பேக்டர்ஆத்தன்டிகேஷன் அம்சம் வழக்கமான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பாதுகாப்பு அடுக்குக்கு அப்பால் பயனர்களின் கணக்குகளை பாதுகாக்கும்

பாதுகாப்பு அடுக்கு

இந்த அம்சம் மூலம் வாட்ஸ்ஆப் ஆனது 'மொபைல் மூலம் வழங்கப்படும் குறியீடுகள் போன்ற ஒரு மாற்று அங்கீகார முறையை வழங்கும். இது பாதுகாப்பு அடுக்கு, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்போன வரையறையை மீறி செயல்படும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விண்டோஸ் போன்

வாட்ஸ்ஆப் ஆனது எப்போதும் விண்டோஸ் போன்ளின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வருகிறது மற்றும் இந்த புதிய அம்சத்தை விண்டோஸ் போனில் எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாட்ஸ்ஆப் அதிகாரிகள் இப்போதுவரையிலாக இந்த புதிய அம்சம் சார்ந்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும், அதன் பயனர்களுக்கு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்ஆப் நிறுவனம் நீண்ட நேரம் எடுத்து கொள்ளாது.

மேலும் படிக்க

ரூ.3/-க்கு ஏர்செல் 3ஜி இண்டர்நெட் பேக் பெறுவது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Here's How WhatsApp is Planning To Upgrade Security Level For Users. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்