ஜியோவிற்கு எதிராய் ஏர்டெல், ஐடியா, வோடபோனின் ஆபர்கள் என்னென்ன.?

இதோ ஆரம்பிச்சுட்டாய்ங்க.. இனிமே தினமும் "சபாஷ் சரியான போட்டி" தான்.!!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானியின் சமீபத்திய அறிவிப்பின்படி ஏர்டெல், ஐடியா செல்லுலார், வோடபோன் மற்றும் பல இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு இனியும் மென்மையான காலங்கள் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது.

மார்ச் 31-ஆம் தேதியோடு இதுவரை வழங்கி வந்த இலவச சேவைகளை நிறுத்திக்கொள்வதோடு அதன் பிறகு, ஜியோ ப்ரைம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால் இந்த முறை ஜியோவின் இலவச சேவைகளுடன் இன்றி அதன் கட்டண திட்டங்களுடன் பிற நிறுவனங்கள் போட்டிப்போட வேண்டுமென்பது தான் அனைவர்க்கும் உள்ள பொதுவான ஒரே ஒரு சாதகமான விடயமாகும்.

இந்த சாதகத்தை பயன்படுத்தி வோடாபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற பெருநிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகளை வழங்குகிறது என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வோடாபோன்

வோடாபோன் வோடாபோன் நிறுவனமா அதன் 4ஜி டேட்டா கட்டண திட்டங்களை ரூ.150/- முதல் ஆரம்பிக்கிறது 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பெறலாம் இதேபோல், ரூ.250/-க்கு 4ஜிபி தரவும், ரூ.350/-க்கு 6ஜிபி தரவும், ரூ.450/-க்கு 9 ஜிபி தரவும், ரூ.650/0க்கு 13ஜிபி தரவும், ரூ.999/-க்கு 22ஜிபி தரவும், ரூ.1500/-க்கு 35ஜிபி தரவும் வழங்குகிறது இந்த அனைத்து திட்டங்களும் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

டேட்டா வரம்பும் கிடையாது

குறிப்பாக இந்த திட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ போலல்லாமல் எந்த எந்த தினசரி டேட்டா வரம்பும் கிடையாது. ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த திட்டங்களை பெற முடியும்.

ஏர்டெல்

தற்போதைக்கு ரிலையன்ஸ் ஜியோவிற்கு சரியான போட்டியாக திகழும் சில திட்டங்களை மட்டுமே ஏர்டெல் கொண்டுள்ளது. அதன் ப்ரீபெய்ட் 4ஜி தரவு திட்டம் ஒன்றின்கீழ் 30ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை ரூ.1,495/-க்கு வழங்குகிறது.

சிறப்பு 4ஜி தரவு திட்டங்கள்

ஏர்டெல் அதன் சிறப்பு 4ஜி தரவு திட்டங்களின் கீழ் புதிதாக 4ஜி சேவைக்கு மாறிய வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்களுக்கான ரூ.9,000/- மதிப்புள்ள தரவை வழங்குகிறது. இந்த 12 மாதங்களுக்கான வாய்ப்பை 4ஜி மொபைல் கொண்டுள்ள மற்றும் ஏற்கனவே ஏர்டெல் சேவையில் இல்லாத புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை 2017 பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் முடிகிறது.

இலவசமாக 3ஜிபி தரவு

ஏர்டெல் ரூ.345/- திட்டத்தின் கீழ் 3ஜிபி அளவிலான தரவை அதன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த வாய்ப்பின் கீழ், நேரடியாக ஏர்டெல் 4ஜி சேவைக்கு மாறும் புதிய வாடிக்கையாளர்கள் இலவசமாக 3ஜிபி தரவுடன் சேர்த்து ஏர்டெல் வழங்கும் ரூ.345/- ப்ரீபெய்ட் ரீசார்ஜின்வழக்கமான பேக் நலன்களையும் அனுபவிக்க முடியும்.

13 முறை ரீசார்ஜ்

உள்ளூர் மற்றும் வெளியூர் இலவச அழைப்புகளை வழங்கும் இந்த ரூ.345/- பேக் ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் இந்த திட்டத்தை 31 டிசம்பர் 2017 வரை அதிகபட்சமாக 13 முறை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

போஸ்ட்பெயிட் பயனர்

உடன் ஏர்டெல் அதன் அனைத்து மைப்ளான் இன்பினிட்டி திட்டங்களின்கீழும் மாதத்திற்கு இலவசமாக 3 ஜிபி தரவை அதன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது. ஏற்கனவே ஏர்டெல் சேவையில் இல்லாத புதிய பயனர்கள் மைப்ளான் இன்பினிட்டி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3ஜிபி அளவிலான இலவச டேட்டாவை பெறலாம்.

வழக்கமான நன்மை

உடன் இன்பினிட்டி திட்டங்களின்கீழ் உள்ளூர், வெளியூர், ரோமிங் இலவச வாய்ஸ், இலவச எஸ்எம்எஸ் மற்றும் வின்க் ம்யூசிக் மற்றும் மூவிஸ் இலவச சந்தா ஆகிய வழக்கமான நன்மைகளையும் பெறலாம்.

ஐடியா செல்லுலார்

புதிய 4ஜி சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 3ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று கடந்த மாதம் ஒரு புதிய திட்டத்தை ஐடியா அறிவித்தது. அதன்படி இலவச தரவானது வாடிக்கையாளர்களின் வட்டம் மற்றும் கைபேசியை பொறுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ரீபெய்ட் 4ஜி

ஏற்கனவே இருக்கும் ஐடியா ப்ரீபெய்ட் 4ஜி கைபேசி வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ், கூடுதலாக 1ஜிபி டேட்டா ஆகியவைகளை ரூ.348/-க்கு ஐடியா வழங்குகிறது. ஒரு புதிய 4ஜி கைபேசியில் இந்த பேக்கை ரீசார்ஜ் செய்யும் பயனாளிகளுக்கு கூடுதலாக 3ஜிபி தரவு கிடைக்கும். இந்த பேக் ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் அதிகபட்சமாக 365 நாட்களில் 13 முறை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ரெண்ட்ல் ப்ளான்

உடன் ஐடியா அதன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.499/- என்ற ரெண்ட்ல் ப்ளான் ஒன்றையும் வழங்குகிறது. இதன் மூலம் வரம்பற்ற உள்ளூர், தேசிய மற்றும் உள்வரும் ரோமிங் அழைப்புகள் ஆகிய நன்மைகளையும் கூடுதலாக 4ஜி கைபேசி கொண்டவர்களுக்கு 3ஜிபி டேட்டாவும் 4ஜி அல்லாத கைபேசி கொண்டவர்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உடன் 1ஜிபி இலவச தரவு கிடைக்கும்.

ரூ.999/- பேக்

மேலுமொரு ரெண்டல் ப்ளான் ஆன ரூ.999/- பேக்கின் கீழ்ஐடியா போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.499/- கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும், கூடுதலாக 4ஜி கைபேசி கொண்டவர்களுக்கு 8ஜிபி டேட்டாவும் 4ஜி அல்லாத கைபேசி கொண்டவர்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உடன் 5ஜிபி இலவச தரவு கிடைக்கும்.

ரூ.100/-க்கு ஏர்டெல் அதிரடி

நேற்று ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான அதன் போட்டி கட்டண திட்டம் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது என்பதையும் குறிப்பிடத்தக்கது. ரூ.100/-க்கு ஏர்டெல் அதிரடி டேட்டா ஆபர் , ஜியோவிற்கு டாட்டா..!

மேலும் படிக்க

ரிலையன்ஸ் ஜியோ : கட்டண திட்டங்களின் விவரம்.!
ஜியோ ப்ரைம் மெம்பராக மாறுவது எப்படி.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Here is what Airtel, Idea and Vodafone are offering to counter Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்