வந்த வரை ஜியோ லாபம் : என்ஜாய் பண்ணும் ஏர்டெல், ஐடியா, வோடபோன்.!

ரிலையன்ஸ் ஜியோ அதன் வெல்கம் ஆஃபரை நீட்டிப்பு செய்தால் நாட்டில் உள்ள மற்ற தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் அதுவொரு பெரிய ஆதரவாக இருக்கும் என்று அர்த்தம்.

Written By:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலாக அதன் வெல்கம் ஆஃபரை நீட்டிக்கலாம் என்று அண்மையில் பல்வேறு விதமான யூகங்கள் கிளம்பின.

வியூகங்கள் ஒருபக்கம் இருக்க, அது சார்ந்த எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் கிடையாது. எனினு அது உண்மையாக மாறிவிடும் போது, அது நிச்சயமாக பார்தி ஏர்டெல், ஐடியா, வோடாபோன் போன்ற நாட்டில் உள்ள மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பயன் தரலாம். அதெப்படி..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆக்கிரமிப்பு

"தள்ளுபடி பிராண்ட்" என பெயரிடப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோவானது அது டிசம்பருக்கு அப்பால் அதன் வெல்கம் ஆஃபரை நீட்டிப்பு செய்தால் நிச்சயமாக அதன் விளைவாய் பல எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை ஆக்கிரமிப்பு செய்ய முடியும் என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை.

திறனை குறைக்க கூடும்

ஒரு அறிக்கையின் கீழ் இந்த அறிமுக சலுகை நீடிப்பானது மிக பெரிய அச்சுறுத்தலை ஜியோவிற்கு வழங்கும். அதாவது ஒரு நீண்ட நீட்டிப்பு இலவச சேவைகள் ஆனது புதிதாக நிலைப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்த்தின் திறனை குறைக்க கூடும், அதற்கு முக்கிய காரணமாக அதன் சலுகைகள் திகழும்.

தேர்வு செய்வதை நிறுத்திக் கொள்வர்

கூடுதலாக மிட் ரேன்ஜ் மற்றும் ஹை எண்ட் சந்தாதாரர்கள் தள்ளுபடி பிராண்டுகளை தேர்வு செய்வதை நிறுத்திக் கொள்வர் என்று (தொழில் ஆய்வாளர்கள் படி) என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எப்படி ஒரு தள்ளுபடி பிராண்ட் ஆக முடியும்

எனினும், தொலைத்தொடர்புக்கு நெருக்கமாக இருக்கும் மக்கள் மேற்கூறப்பட்டுள்ள அறிக்கை தகவலை ஏற்க மறுக்கின்றனர். ஜியோவின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையினர் ரூ.4000/- தொண்டங்கி ரூ.20,000/- வரையிலான வோல்ட் ஆதரவு போன்களை பயன்படுத்தும் போது ஜியோ எப்படி ஒரு தள்ளுபடி பிராண்ட் ஆக முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றன.

சலுகைகள் மட்டும்

ஜியோ ஏற்கனவே ஒரு உலகளாவிய டிஜிட்டல் சலுகைகளை வழங்கும் நிறுவனம் என்று அங்கீகரிக்கப்பட்டு அனைத்து பிரிவுகளிலும் மில்லியன் கணக்கான நுகர்வோர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. மறுபக்கம் இதன் சலுகைகள் மட்டும் நீட்டித்து தரம் குறைந்தால் ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிலையான நிறுவனங்களுக்கு நிச்சயம் லாபம் தான்.

மேலும் படிக்க

ஜியோ சிம் 'மக்கர்' செய்கிறதா..? புகார் அளிப்பது எப்படி.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Here’s How Airtel, Idea, and Vodafone Could Benefit From Reliance Jio if It Extends Welcome Offer. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்