அடித்துக்கூறினாலும் நீங்கள் நம்பக்கூடாத ஜியோ வாக்குறுதிகள்.!

ரிலையன்ஸ் ஜியோ சேவை அதன் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தாதது ஏன்.?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது எனினும் அதன் சேவையில் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகும்கூட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் பூரணமடையவில்லை. ஏன் தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ சேவை இமாலய புகழ் முக்கிய காரணமாக அதன் வரம்பற்ற இணைய சலுகை, இலவச குரல் அழைப்புகள், மற்றும் பல கவர்ச்சிகரமான கட்டண திட்டங்கள் தான். ஜியோ சேவை தொடங்கப்பட்ட உடனேயே அதன் சலுகைகள் மற்றும் திட்டங்கள் முற்றிலும் தொலைத் தொடர்புத்துறையையே மாற்றி அமைத்ததுஎன்றே கூறலாம். அம்பானி தலைமையிலான ஜியோ அறிமுக விழாவில் இந்தியாவின் சிறந்த இணைய வேகத்தை ஜியோ வழங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

கூறியபடியே ஜியோ அதன் ஆரம்ப நாட்களில் ஒரு பெரிய அளவிலான இணைய வேகத்தை வழங்கியது ஆனால் நாட்கள் கடக்க கடக்க வேகம் ஒரு மிகப்பெரிய விகிதத்தில் குறைந்து வருகிறது. சிக்கல்கள் அது மட்டுமல்ல, நிறைய இருக்கிறது.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வேகம்

ஆரம்பத்தில் ரிலையன்ஸ் ஜியோ வேகம் அதிரடி காட்டியது ஆனால், போகப்போக அதனால் நிலையான இன்டர்நெட் வேகத்தை வழங்க இயலவில்லை.

ஸ்பீட் டிராப்

அதன் பின்னர் ஏகப்பட்ட வேகக்குறைவு மற்றும் ஸ்பீட் டிராப் குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு ஜியோ உள்ளாகத்தொடங்கியது. அதாவது ஜியோ அதன் வேகம் சார்ந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

"அன்லிமிடெட்" இண்டர்நெட்

ரிலையன்ஸ் ஜியோவின் மற்றொரு அதிரடி சலுகை தான் "அன்லிமிடெட்" இண்டர்நெட். அது தான் அதிக சாத்தியமான வாடிக்கையாளர்களை ஈர்த்தது என்றே கூறலாம்.

இணைய பயன்பாடு

ஆனால் உண்மை என்னவெனில் ஜியோவினால் வரம்பற்ற இணையம் வழங்க முடியாது என்பது தான். நாள் ஒன்றிற்கு அதன் இணைய பயன்பாடு 4ஜிபி என்ற எல்லை கொண்டது. அதன் பின்னர் இணைய வேகம் வியக்கத்தக்க வண்ணம் வீழ்ந்துவிடுகிறது. எனவே இந்த வாக்குறுதியும் காப்பாற்றப்படவில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஜிட்டல் வாழ்க்கை

ஜியோ ஒரு டிஜிட்டல் வாழ்க்கையை கட்டமைக்கும் வாக்குறுதி அளித்தது ஆனால், அந்த வாக்குறுதியானது குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு மட்டுமே உருவாக்க முடியும் என்பது போல் தெரிகிறது.

நெரிசலான பகுதிகளில் மட்டுமே

ஏர்டெல், வோடபோன் போன்ற மற்ற தொலைத்தொடர்பு பெருநிறுவனங்கலை போல கிராமப்புற பகுதிகளுக்கு ஜியோ உட்புகவில்லை மிகவும் நெரிசலான பகுதிகளில் மட்டுமே ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் வாழ்க்கையை வழங்குகிறது.

பலவீனம்

ரிலையன்ஸ் ஜியோ சலுகை மீதான நன்மைகள் மற்றும் தீமைகளை விட நாட்கள் நகர நகர வாடிக்கையாளர் சேவையில் இருந்து சிம் கார்டு ஆக்டிவேஷன் வரையிலாக எல்லாவற்றிலும் வாக்குறுதிகளை விட பலவீனம் தான் அதிகம் வெளிப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Here Are the Promises By Reliance Jio That You Shouldn't Believe. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்