அமெரிக்கா ஆதிக்கம், அடிபணியுமா இந்தியா..!!

Posted by:

சூப்பர் பவர் நாடுகளிடையே அதிக ஆதிக்கம் செலுத்துவதோடு, அந்நாடுகளை ஆளும் திட்டத்தோடு ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் மிகவும் சரியாக அமெரிக்கா ஈடுப்பட்டு வருகின்றது என்றே கூறலாம்.

ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

அந்த வகையில் உலகெங்கும் நடைபெறும் அனைத்து பிரச்சனைகளிலும் அமெரிக்கா தலையிடுவதோடு அவர்களுக்கு 'பஞ்சாயத்து' செய்யும் நோக்கில் அவர்களை கட்டுப்படுத்தவும் நினைப்பது வாடிக்கையான ஒன்றே. அவ்வாறே அமெரிக்கா, இந்தியாவிடமும் முயற்சி செய்வதை தெளிவாக எடுத்துரைக்கின்றது அமெரிக்காவின் வியாபார தந்திரம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்

ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் நவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் 1984 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கின்றது.

ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்

தொலைதூர இலக்குகளை துல்லியமாக அடைய ஃபயர் கண்ட்ரோல் ரேடார் தொழில்நுட்பம் மற்றும் லாங்பௌ ஹில்ஃபையர் ஏவுகணை பயன்படுத்தப்படுகின்றது.

சி-17 க்ளோப்மாஸ்டர் III

போயிங் சி-17 களோப்மாஸ்டர் III ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நான்கு என்ஜின் கொண்டிருக்கின்றது.

சி-17 க்ளோப்மாஸ்டர் III

இந்த விமானத்தில் இருக்கும் ப்ரோப்பல்சிவ் லிஃப்ட் சிஸ்டம் குறுகிய ஓடு பாதைகளிலும் சிரமம் இன்றி தரையிறங்க வழி செய்யும்.

எம்777 ஹௌவிட்சர்ஸ்

எம்777 ஹௌவிட்சர்ஸ் வகை ஏவுகணைகளில் டிஜிட்டல் ஃபயர் கண்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் கன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்டைரக்ட் ஃபயர் கண்ட்ரோல் மென்பொருள் பயன்படுத்தப்படுகின்றது.

எம்777 ஹௌவிட்சர்ஸ்

இதோடு இந்த வகை ஏவுகணையில் எக்ஸ்காலிபர் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சுமார் 40 கிமீ தூரம் வரை துல்லியமாக தாக்க முடியும்.

சிஎச்-47எஃப் சினூக்

இந்த வகை ஹெலிகாப்டர்களில் ராக்வெல் காலின்ஸ் காமன் ஏவியோனிக்ஸ் கட்டமைப்பு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிஎச்-47 எஃப் சினூக்

மேலும் இந்த ஹெலிகாப்டரில் மேம்படுத்தப்பட்ட ஃபைட் கண்ட்ரோல் சிஸ்டம், மேப் டிஸ்ப்ளே, டிஜிட்டல் மோடெம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கொண்டிருப்பதோடு கன நேரத்தில் தகவல்களை பறிமாறி கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றது.

பி-8ஐ ஏர்கிராஃப்ட்

பி-8ஐ விமானமானது ப்ரைமரி ஃப்ளைட் டிஸ்ப்ளே, மல்டிஃபன்ஷன் டிஸ்ப்ளே, ஃப்ளைட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டோர்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கொண்டிருக்கின்றது.

பி-8ஐ ஏர்கிராஃப்ட்

மேலும் மல்டிமோடு ரேடார், கன்காணிப்பு ரேடார் கொண்டிருக்கும் இந்த விமானம் பகல், இரவு மற்றும் அனைத்து வித வானிலைகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Here are the Hi Tech arms the US wants India to buy. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்