ரூ.136/- ஃப்ரீடம் பிளான், பிஎஸ்என்எல் அசத்தல் திட்டம்.!

ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ளப் பிஎஸ்என்எல் ஃப்ரீடம் பிளான் அறிமுகம். இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் ஜியோவை மிஞ்சுமா.??

Written By:

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு போட்டி நிறுவனங்களும் தங்களின் சேவைக் கட்டணங்களைக் குறைத்து வருகின்றன. புதிய ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் கூடுதல் சலுகை எனப் பயனர்களுக்கு தினம் ஒரு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வரிசையில் பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு ஃப்ரீடம் பிளான் ஒன்றை அறிமுகம் செய்தது. பிரீபெயிட் மொபைல் பயனர்களுக்கு வழங்கப்படும் இந்தத் திட்டத்திற்கான கட்டணமாக ரூ.136/- வசூலிக்கப்படுகிறது.

புதிய மற்றும் பழைய பிஎஸ்என்எல் பயனர்கள் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்த முடியும். இங்குப் பிஎஸ்என்எல் ஃப்ரீடம் பிளான் குறித்த விரிவான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆல் இன் ஒன் பிளான்

பிஎஸ்என்எல் ஃப்ரீடம் பிளான் பல்வேறு சலுகைகளை வழங்கும் திட்டம் ஆகும். வாய்ஸ் கால், வீடியோ, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா எனப் பல்வேறு பயன்களை ஒற்றை ரீசார்ஜ் செய்து பயனர்கள் அனுபவிக்க முடியும்.

இலவச டேட்டா

இந்தப் பிளான் ரூ.577/-மதிப்புடைய வவுச்சர் கொண்டுள்ளது, இதில் ஃபுல் டாக்டைம், 1 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 730 நாட்கள் அதாவது இரண்டு ஆண்டுகள் ஆகும். மற்றொரு வவுச்சர் ரூ.377/- கட்டணத்திற்குக் கிடைக்கிறது. இதில் பயனர்கள் ஃபுல் டாக்டைம் மற்றும் 300 எம்பி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.178/- வவுச்சர் மூலம் ஃபுல் டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா சுமார் 10 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அழைப்புக் கட்டணம்

பிஎஸ்என்எல் ஃப்ரீடம் பிளாழ் மூலம் அழைப்புகளை முதல் 30 நாட்களுக்கு நிமிடத்திற்கு 25 பைசாவிற்குப் பெற முடியும். இந்தக் கட்டணம் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலவச டேட்டா

ஃப்ரீடம் பிளான் ரீசார்ஜ் செய்வோருக்கு முதல் 30 நாட்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

குறைந்த கட்டணம்

ஒரு மாத காலம் நிறைவடைந்ததும் பயனர்கள் லோக்கல் மற்றும் ரோமிங் அழைப்புகளை நொடிக்கு 1.3 பைசா செலவில் மேற்கொள்ள முடியும். மேலும் இந்தத் திட்டத்தில் கஸ்டமைசேஷன் வசதியும் வழங்கப்படுகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Here are Benefits of Choosing the Rs.136 BSNL Freedom Plan
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்