அம்பலம் : 'நொடிக்கு நொடி' உங்களை உளவு பார்க்கும் 3 நிறுவனங்கள்..!

Posted by:

உங்களுக்கு தெரியுமா ? உங்களுக்கே தெரியாமல்.. உங்கள் மொபைல் போனோ, அலது டிவியோ உங்களை ரகசியமாக 'ட்ராக்' செய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா..? நீங்கள் ஆன்லைனில் இருந்தால் மட்டுமில்லை, ஆஃப் லைனில்இருக்கும் போது கூட நீங்கள் ட்ராக் செய்யப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறீர்கள்.

அப்படியாக, உங்களுக்கே தெரியாது உங்களை 'ட்ராக்' செய்யும் 3 நிறுவனங்களையும், அவைகளின் 'ட்ராக்கிங்' வேலைகளையும் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

03. சில்வர்புஷ் :

2013-ஆம் ஆண்டில் பேட்பயோஸ் (badBIOS) வகையிலான ஒரு ஆடியோ பேஸ்டு மால்வேர் (Audio-based malware) உருவாக்கப்பட்டது.

மைக் மற்றும் ஸ்பீக்கர் :

இந்த பேட்பயோஸ் கருவியானது மைக் மற்றும் ஸ்பீக்கர் ஆகிய இரண்டிற்கும் நடுவே பொருத்தப்பட்டிருக்கும்.

ட்ராக் :

செல்போன்கள், டிவிக்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் பொருத்தப்பட்டு 'ட்ராக்' செய்து உளவு பார்க்கப்படும் இந்த கருவியை உருவாக்கியது என்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

67 ஆப்ஸ் :

2015-ஆம் ஆண்டு வரையிலாக சுமார் 67 ஆப்ஸ்களில் என மொத்தம் 18 மில்லியன் பேர் இதன் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளன என்கிறது தகவல்கள்.

02. விசியோ / சாம்சங் :

இதுவரை மொத்தம் 10 மில்லியன் விசியோ டிவிக்கள் நமது டிவி காணும் பழக்கத்தின் டேட்டாக்களை (viewing behaviour data) பதிவு செய்துள்ளது.

டேட்டா ப்ரோக்கர்ஸ் :

நீங்கள் என்ன விரும்பி பார்க்கிறீர்கள் என்பதை மானிடருக்கு பின்பு இருக்கும் டேட்டா ப்ரோக்கர்ஸ் (data brokers) மூலம் பதிவு செய்யப்படும்.

ஐபி :

பின் அது உங்களின் ஐபி விலாசத்துடன் விளம்பரதாரார்களுக்கு விற்கப்படும்.

சாம்சங் ஸ்மார்ட் டிவி :

இந்த ட்ராக்கிங்கில், சாம்சங் ஸ்மார்ட் டிவியும் ஈடுபடுகிறது என்றும், அதன் மூலம் குரல்கள் பதிவு செய்யப்பட்டு 3-ஆம் நபருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு சாம்சங் மேல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

01. டிட்டோ லாப்ஸ் :

ஒரு நாளைக்கு சுமார் 800 மில்லியன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.

இமேஜ் ஸ்கேனிங் :

அதை கொண்டு தான் டிட்டோ லாப்ஸ் என்னும் நிறுவனம் இமேஜ் ஸ்கேனிங் மற்றும் ஃபேஷியல் ரிக்கனைஷேஷன் மூலம் நம்மை நிர்ணயம் செய்கிறது.

கார்ப்பரேட் :

அதாவது நமக்கு எந்த நிறம் பிடிக்கும், எந்த வகையான லோகோ பிடிக்கும், எந்த விதமான பிராண்ட் பிடிக்கும் என்பதை நிர்ணயிக்கும், அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துல்லியமான யோசனைகளை வழங்கும்.

டேவிட் ரோஸ் :

ஒருவரின் 2 வருட புகைப்பட தொகுப்பை பார்த்தால் அவரைப்பற்றி நிறைய விடயங்கள் என்னால் கூற முடியும் என்று டிட்டோ லாப்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான டேவிட் ரோஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Here are 3 Companies Secretly Tracking You Right Now. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்