வாட்ஸ்ஆப் கோளாறுகளும் அதற்கான தீர்வுகளும்..

By Meganathan
|

தினமும் வாட்ஸ்ஆப் செயலியில் கண் விழித்து, அதே வாட்ஸ்ஆப்பில் கடைசியாக இரவு வணக்கம் சொல்லும் அனைவரும் இச்செயலியில் பல்வேறு கோளாறுகளை அவ்வப்போது எதிர்கொள்வதுண்டு. என்ன நாள் முழுவதும் பயன்படுத்துவதால் இச்சிறிய கோளாறுகளை யாரும் கண்டு கொள்வதில்லை. இவற்றைச் சரி செய்ய வேண்டுமென்றும் நினைப்பதில்லை.

இருந்தும் என்றாவது அவசர பணிகளின் போது வாட்ஸ்ஆப்பில் இது போன்ற கோளாறுகள் ஏற்படுவது இதனை எதிர்கொள்ளும் அனைவருக்கும் எரிச்சலூட்டும் செயலாக இருக்கும். இது போன்ற எரிச்சலில் சிக்கும் முன் அல்லது ஏற்கனவே கடுப்பாகி இருந்தாலும் அடுத்து வரும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்..

காண்டாக்ட்

காண்டாக்ட்

சில சமயங்களில் வாட்ஸ்ஆப் நாம் சேவ் செய்திருக்கும் காண்டாக்ட்களையும் பெயர் வாரியாக காட்டாமல், நம்பர் மட்டுமே காட்டும்.

இப்பிரச்சனையைச் சரி செய்ய முதலில் குறிப்பிட்ட காண்டாக்ட் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பின் வாட்ஸ்ஆப் செட்டிங் சென்று 'visible' அல்லது 'viewable' என மாற்ற வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அழைப்புகள்

அழைப்புகள்

வாட்ஸ்ஆப் பயனர்கள் செயலியின் வாய்ஸ்கால் தரம் சரியில்லை கால் டிராப்அவுட், கால் மேற்கொள்ள முடியாமல் போவது போன்ற குற்றச்சாட்டுகள் வாடிக்கையான ஒன்றாக இருக்கின்றது.

இப்பிரச்சனைக்கு மறுபக்கம் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் இண்டர்நெட் வசதி தரமுள்ளதாக இருக்கின்றதா என்பதைச் சரி செய்ய வேண்டும்.

ஆடியோ குறுந்தகவல்

ஆடியோ குறுந்தகவல்

சில சமயம் வாட்ஸ்ஆப் ஆடியோ குறுந்தகவல் தெளிவாக கேட்க முடிவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வாட்ஸ்ஆப் செயலி சார்ந்திருக்கும் பிராக்ஸிமிட்டி சென்சார் ஆகும்.

ஒரு வேலை பிராக்ஸிமிட்டி சென்சார் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தால் ஆடியோ பிளேபேக் குறைவாக இறுக்கும். தெரியாமல் பிராக்ஸிமிட்டி சென்சாரினை தொட்டாலே ஆன் செய்யப்பட்டு விடும்.

இப்பிரச்சனைக்குக் குரலை பதிவு செய்யும் போது திரையை சற்றே தூரமாக வைக்க வேண்டும். மிக அருகில் இருக்கும் போது குரல் தரம் குறைவாகப் பதிவாகக்கூடும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டவுன்லோடு

டவுன்லோடு

சில சமயம் வாட்ஸ்ஆப் செயலியில் அனுப்பப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்களை டவுன்லோடு செய்ய இயலாத நிலை ஏற்படும்.

இப்பிரச்சனையைச் சரி செய்ய செட்டிங்ஸ் -- டேட்டா யூசேஜ் சென்று மீடியா டவுன்லோட்ஸ் ஆப்ஷன் ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். ஆஃப் செய்யப்பட்டிருந்தால் அதனை ஆன் செய்தாலே இப்பிரச்சனை சரியாகிவிடும்.

மேலும் இண்டர்நெட் கனெக்ஷன் சரியாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

லாஸ்ட்சீன்

லாஸ்ட்சீன்

சில சமயங்களில் லாஸ்ட் சீன் டைம்ஸ்டாம்ப் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

இப்பிரச்சனை ஒரே காண்டாக்ட்டில் மட்டும் ஏற்பட்டால், குறிப்பிட்ட காண்டாக்ட் லாஸ்ட் சீன் ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்திருக்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Have a problem with WhatsApp, Here are the solutions Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X