ஆப்பு வைக்கும் ஆட்டோமேடிக் டிரையர்!

Written By:

பொது இடங்களான ஷாப்பிங் மால், தியேட்டர் என எங்குச் சென்றாலும் கழிப்பறைகளில் புதிய கருவி ஒன்றினை காண முடிகிறது. கை கழுவியதும் டிஷ்யூ பேப்பர் எனும் காகித துண்டின் அருகில் இருக்கும் இந்தக் கருவியை நோக்கி கைகளை காண்பித்தால் சூடான காற்று வீசப்படும். இது கையில் இருக்கும் ஈரத்தை வெப்பக்காற்று மூலம் துடைக்கின்றது.

ஈரமாக இருக்கும் கையை துடைப்பதோடு இந்தக் கருவி நமக்குத் தீங்கு விளைவிப்பது உங்களக்கு தெரியுமா?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆட்டோமேடிக்

ஆட்டோமேடிக் ஹேன்ட் டிரையர் அதாவது தானியங்கி முறையில் கையை துடைக்கும் கருவி இன்று பெரும்பாலான பொது கழிப்பறைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

பயன்பாடு

கையை நீட்டியதும் சூடான வெப்பக்காற்றை வீசுவதால் பலரும் இந்தக் கருவியை பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் தியேட்டர் அல்லது குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வருவோர் குளிர் காயவும் இந்தக் கருவியை பயன்படுத்துவர்.

ஆபத்து

ஆட்டோமேடிக் டிரையரில் இருந்து வரும் வெப்பக்காற்றுடன் அதிகளவு கிருமிகளும் உங்களது கையில் பரவும். இது கையை துடைக்கும் காகித்தை விட அதிகளவு கிருமிகளை பரப்புவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு

பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பாதிப்பில்லாத கிருமிகளை ஆய்வில் கலந்து கொண்டவர்களில் கைகளில் வைத்து அவர்களை ஆட்டோமேடிக் டிரையர் அல்லது காகிதங்களை பயன்படுத்தக் கோரினர்.

கருவி

ஆய்வில் ஜெட்-ஏர் டிரையர், வொர்ம் ஏர் டிரையர் மற்றும் காகித துண்டு போன்றவை வழங்கப்பட்டன. பின் அவற்றைப் பயன்படுத்திய ஒவ்வொருத்தவர் கைகளும் தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டது.

முடிவு

பின் டிரையர் மற்றும் காகிதங்களை பயன்படுத்தியோர் கைகளில் இருக்கும் கிருமிகளை ஆய்வு செய்தனர். இதில் டிரையர் பயன்படுத்தியோர் கைகளில் அதிகளவு கிருமிகள் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

மோசம்

வொர்ம் ஏர் டிரையர்களை விட ஜெட்-ஏர் டிரையர் கருவிகள் 4.5 மடங்கு அதிகளவு கிருமிகளை பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது. இது காகித துண்டுகளை விட 27 சதவீதம் அதிகம் ஆகும்.

நேரம்

மேலும் இந்தக் கிருமிகள் டிரையர்களை பயன்படுத்திய பின் நீண்ட நேரம் கருவியிலேயே இருந்ததும் கண்டறிப்பட்டுள்ளது. சுமார் 48 சதவீதம் கிருமிகள் கருவியைப் பயன்படுத்தி ஐந்து நிமிடங்களுக்குப் பின் அங்கேயே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கிருமிகள் சுமார் 15 நிமிடங்களுக்கு உணரப்பட்டதாக ஆய்வுக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி

அடுத்த முறை பொது கழிப்பறைகளில் டிரையர் கருவியை பயன்படுத்தும் போது உங்களது கைகளில் இருந்து கிருமிகள் பரப்பப்படுவதோடு உங்களது கைகளிலும் கிருமிகள் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆய்வு

இந்த ஆய்வானது பிரான்ஸ்'இல் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு மருத்துவமனை தொற்று சார்ந்த நாளேட்டிலும் வெளியிடப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Hand Dryers Blow Bacteria In your hand and Spread Germs Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்