ஆபாசப்படங்களோடு ஐஎஸ்ஐஎஸ்-க்கு 'ஆப்பு' வைக்கப்பட்டது..!

Written By:

கடந்த ஞாயிறு அன்று ஆர்லாண்டோவில் உள்ள ஒரு ஓரின சேர்க்கை இரவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமான கொலையாளி உமர் மடீன் , திவீரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ்-ன் விசுவாசி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையாக ஆன்லைன் முழுதும் கருத்துக்களும், பிராச்சரங்களும் குவிந்த வண்ணம் இருக்க ஹாக்கர்கள் தங்களுக்கே உரிய பாணியில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆப்பு வைத்துள்ளனர்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

அநாமதேய ஹேக்கர் கூட்டு உறுப்பினர்கள் சேர்ந்து ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய அரசு ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் பலவற்றை ஹேக் செய்துள்ளனர்.

#2

ஹேக் செய்தது மட்டுமின்றி அந்தந்த ட்விட்டர் கணக்குகளில் இருந்த ஜிகாதி பிரசாரங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஒரினச் சேர்கை புகைப்படங்கள், ஆபாசப்பட லின்க்குகளை பதிவு செய்துள்ளனர்.

#3

அதாவது, நான் ஓரினச்சேர்க்கையாளன் அதற்கு பெருமை கொள்கிறேன் போன்ற புகைப்படங்களுடன் ஆபாசப்பட இணைப்புகள் பதிவு செய்யப் பட்டுள்ளன..!

#5

ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பாக இஸ்லாமிய அரசு ஆதரவாளர்கள் ட்விட்டரை ஒரு பெரிய சமூக வலைதளமாக பயன்படுத்தினர் என்பதும், தற்போது இதை விட ஒரு இக்கட்டான நிலைமையை, கடினமான எதிர்ப்பை ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் எதிர்கொள்ளவே முடியாது என்பதும் நிதர்சனம்.

#5

2015-ஆம் ஆண்டில் இருந்து சுமார் 125,000 ஐஎஸ்ஐஎஸ் ட்விட்டர் கணக்குகளை கண்டுபிடித்து மூடி விட்டதாக ட்விட்டர் கூறினாலும் அதில் பல அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது என்பது தான் உண்மை.

#7

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Hackers Bomb ISIS Twitter Accounts With Gay Porn After Islamist Attack On Gay Nightclub. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்