ஹேக் செய்தால் $1 மில்லியன் பரிசு..!!

Posted by:

செரோடியம் எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஓஎஸ்9 இயங்குத்தினை ஹேக் செய்பவர்களுக்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அறிமுகமானது ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்..!!

ஹேக் செய்தால் $1 மில்லியன் பரிசு..!!

இந்தாண்டின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட செரோடியம் நிறுவனத்தை சைபர் செக்யூரிட்டி வல்லுநரான சௌக்கி பெக்ரர் தலைமை வகிக்கின்றார். இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இயங்குதளத்தை பாதிப்புக்குள்ளாக்குபவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இருக்கலாம் என அறிவித்துள்ளது.

பேட்டரி பேக்கப் : ஆண்ட்ராய்டை பின் தள்ளும் ஐபோன்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளம் தற்சமயம் உலகின் தலைசிறந்த ஒன்றாக இருப்பதோடு அதிக பாதுகாப்பு கொண்டிருக்கின்றது என்கின்றது செரோடியம் நிறுவனம். உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இந்த சவாலில் பங்கேற்க இருப்பதாக செரோடியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Hack Apple's iOS 9, earn $1 million. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்