Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஏப்ரலில் புதிதாக 6.5 மில்லியன் மொபைல்போன் இணைப்புகள்!

Updated: Tuesday, March 26, 2013, 13:29 [IST]

gsm telecom add 6 5 million new subscribers in april

ஜிஎஸ்எம் செல்போன் இணைப்புகள் இந்தியாவில் 67 கோடியை தாண்டிவிட்டதாக செலுலார் ஆப்பரேட்டர் சங்கம் கூறியிருக்கிறது.

ஜிஎஸ்எம் இணைப்புகள் இந்த முறை அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ஜிஎஸ்எம் இணைப்பின் எண்ணிக்கை விவரம்

பற்றி தகவல்களை வெளியிட்டு இருக்கிறது செலுலார் ஆப்பரேட்டர் சங்கம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 65 லட்சம் ஜிஎஸ்எம் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மார்ச் மாதத்தில் 66 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரமாக இருந்த இணைப்புகளின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில் 67 கோடியே 5 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட 11 லட்சத்தை தொடும் அளவு வித்தியாசத்தினை காட்டுகிறது புதிய ஜிஎஸ்எம் இணைப்புகளின் எண்ணிக்கை.

இதில் மற்ற ஆதித்தியா பிர்லா குழுமம், வோடாபோன், யூனினார் என்று மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.

இதில் 20 லட்சத்து 10 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனம். வாடிக்கையாளர்கள் இணைப்பு சந்தையில் ஏர்டெல் நிறுவனம் 27.33 சதவிகித பங்குகளையும், வோடாபோன் நிறுவனம் 22.56 சதவிகித பங்குகளையும் பெற்றுள்ளது.

ஒரு மாதத்தின் இணைப்புகளின் எண்ணிக்கையே பல லட்சம் வித்தியாசத்தினை காட்டுகிறது. இதனால் வரும் மாதங்களில் புதிய ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published:  Saturday, May 26, 2012, 14:29 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll