'டார்க் மேட்டர்' - விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மம்..!

|

அறிவியலும், தொழில்நுட்பமும் உச்சக்கட்ட வளர்ச்சி நிலையை அடைந்து விட்டது என்று நினைத்து கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தில் பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பெரும் புதிர் தான் - கரும்பொருள். உலகின் மாபெரும் மற்றும் அதிநவீன தொலைநோக்கிகளுக்குள் கூட 'அடங்காத' ஒன்று தான் கரும்பொருள் என்பது நிதர்சனம்.

கிரகங்கள், நட்சத்திரங்கள் என அண்டத்தில் கண்களுக்கு புலப்படக் கூடிய பொருட்களை காணக்கூடிய பொருட்கள் (visible matter) என்பர். அதே போன்று அண்டத்தில் கண்களுக்கு புலப்படாத விடயங்களை கரும்பொருள் என்பர் அதாவது 'டார்க் மேட்டர்' என்பர். அப்படியான காணக்கூடிய பொருட்களின் மீது ஏற்படும் புவியீர்ப்பு விசை மற்றும் பின்புல கதிர்வீச்சின் ஈர்ப்பு ஆகியவைகளால் ஊக்குவிக்கப்படுவது தான் கரும் பொருள் ஆகும்.

சூப்பர் ஹார்ட் டு பைண்ட் :

சூப்பர் ஹார்ட் டு பைண்ட் :

அண்டத்தில் புலப்படும் பொருட்களை எளிமையான அறிவியல் மற்றும் தற்கால தொழில்நுட்பங்கள் கொண்டே ஆராய்ந்து விட முடியும். ஆனால், கரும்பொருள் என்பது அப்படியில்லை, 'ஸ்டில் சூப்பர் ஹார்ட் டு பைண்ட்' (Still Super hard to find) என்று நம்பப்படும் ஒரு விடாயமாகும்.

வியப்பான விடயங்கள் :

வியப்பான விடயங்கள் :

அப்படியான கரும்பொருள் பற்றி, இதுவரை வானியலாளர்கள் மற்றும் வான்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட, வியப்பான விடயங்களைத்தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

உக்கிரமான வெடிப்பு :

உக்கிரமான வெடிப்பு :

13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உக்கிரமான ஒரு வெடிப்பின் மூலம் உருவானது தான் இந்த பிரபஞ்சம் (The Universe). அதன் அடிப்படையில் உருவானது தான் 'பிக் பாங்க்' கோட்பாடு (Big Bang Theory).

பிக் பாங்க் :

பிக் பாங்க் :

நாளுக்கு நாள் நீண்டுக்கொண்டே போகும் அந்த பிக் பாங்க் கோட்பாடின் கீழ் தான் கரும்பொருள் பற்றிய புதிரான முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

84.5% :

84.5% :

டார்க் மேட்டர் ஆனது அண்டத்தின் 84.5% இடத்தைப் ஆட்க்கொண்டுள்ளது.

ஒளியை உறிஞ்சிக்கொள்ளாது :

ஒளியை உறிஞ்சிக்கொள்ளாது :

ஏனைய காணக்கூடிய விண்வெளிப் பொருட்களைப் போல் இல்லை, அதாவது டார்க் மேட்டர் ஆனது மின்காந்த சக்தியுடன் தொடர்பு கொள்ளாது. அதனால் டார்க் மேட்டர் ஆனது ஒளியை உறிஞ்சிக்கொள்ளாது, உமிழாது மற்றும் பிரதிபலிக்காது.

தொலை நோக்கிகள் :

தொலை நோக்கிகள் :

ஆகையால், கண்களுக்கு புலப்படாத இந்த கரும்பொருள் ஆனதை காணக்கூடிய பொருட்கள் மீது செலுத்தும் ஈர்ப்பிலிருந்து தான் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர தொலை நோக்கிகள் மூலம் அல்ல.

1932 :

1932 :

கரும் பொருள் என்ற ஒரு விடயத்தின் இருப்பை முதன்முதலில் (1932) கண்டுப்பிடித்தவர் டச்சு வானியலாளர் ஆன ஜான் ஊர்ட் (Jan Oort) என்பவர் தான்.

தாங்கிப்பிடித்து கொண்டிருக்கிறது :

தாங்கிப்பிடித்து கொண்டிருக்கிறது :

மனித கண்களுக்கு புலப்படாத விடயங்கள் (கரும்பொருள்) தான் விண்மீன் திரள்களை தாங்கிப்பிடித்து கொண்டிருக்கிறது என்று டார்க் மேட்டர் பற்றிய தனது விளக்கத்தை அளிக்கிறார் - சுவிஸ் வானியலாளர் ஆன ஃப்ரிட்ஸ் ஸ்விகீ (Fritz Zwicky).

புல்லட் க்லஸ்டர் :

புல்லட் க்லஸ்டர் :

இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்ட சம்பவமான புல்லட் க்லஸ்டர் (bullet cluster) தான் இதுவரை கிடைக்கப் பெற்ற கரும் பொருள் இருப்பின் ஆதாரங்களில் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈர்ப்பு வில்லை :

ஈர்ப்பு வில்லை :

தூரத்தே இருந்து வரும் ஒளியை இடையில் உள்ள ஒரு பெரிய பொருளால் வளைக்கப்படும் சம்பவத்தை தான் ஈர்ப்பு வில்லை (Gravitational lens) என்பர்.

அறிவியல் தொழில்நுட்ப முறை :

அறிவியல் தொழில்நுட்ப முறை :

அந்த ஈர்ப்பு வில்லை (Gravitational lens) மட்டும் தான் இன்று வரை கரும்பொருள் பற்றி ஆராய கிடைத்துள்ள ஒரே அறிவியல் தொழில்நுட்ப முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>பேய்களை உணர முடிவது எப்படி..!? - அறிவியலாளர்கள் விளக்கம்..!</strong>பேய்களை உணர முடிவது எப்படி..!? - அறிவியலாளர்கள் விளக்கம்..!

<strong>உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!</strong>உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!

<strong>விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மங்கள்..!</strong>விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மங்கள்..!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Gravitational lensing is the only way to detect dark matter. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X