'பல்லான' படங்கள் காட்டும் வலைதளங்களுக்கு 'மூடு' விழா..!

Posted by:

சமூகத்தில் ஒரு பெண், சகமனுஷியாக பார்க்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன, அதுவும் முக்கியமாக இந்தியாவில் சொல்லவே வேண்டாம். ஜீன்ஸ் அணிந்தால் தப்பு, டி-ஷர்ட் போட்டால் தப்பு, துப்பட்டா போடவில்லை என்றால் தப்பு - இப்படியாக பார்க்கும் ஒவ்வொரு கண்களில் வன்மம் ஏறிப்போக மிக முக்கியமான காரணமாக இருப்பது - 'அந்த' மாதிரியான ஆபாச வலைதளங்களின் அதிகரிப்பு தான்..!

மொபைல் : எப்படி இருந்த நான்..? இப்படி ஆகிட்டேன்..!

இந்தியாவில், பள்ளி மாணவர்களில் இருந்து பாராளுமன்ற பெரிய மனிதர்கள் வரை பார்ன் (PORN) வலைதளங்கள் ரொம்பவே சகஜமாகி விட்ட நிலையில், இனி மேல் 'ஆபாச வலைதளங்களுக்கு தடை' என்று அதிரடியாக, மொத்தம் 857 ஆபாச இணையதளங்களை ஒரே நாளில் முடக்கம் செய்து, 'சபாஷ் மற்றும் அதே சமயம் பல எதிர்ப்புகளையும்' வாங்கி கொண்டிருக்கிறது மத்திய அரசு..!

காசு, பணம், துட்டு, மணி மணி..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இந்தியாவின் இன்டர்நெட் மற்றும் மொபைல் கூட்டமைப்பிடம் தடை செய்ய வேண்டிய ஆபாச வலைதளங்களின் பட்டியலை தயார் செய்யும்படி, இந்திய அரசாங்கம் முன்னரே கூறியிருந்தது.

அதை தொடர்ந்து, ஆபாச இணைய தளங்களை தடை செய்யுமாறு இணையதள சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி பார்ன் ஹப், ப்ராஸர்ஸ் போன்ற பிரபல ஆபாச வலைதளங்கள் முடக்கப்பட ஆரம்பிக்கபட்டன.

அதை தொடர்ந்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன..!

இதற்கு நல்ல ஆதாரவும், அதே சமயம் பல தரப்பட்ட எதிர்ப்பும் கிளம்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
The government has sent a notice to internet service providers to block more than 850 porn websites.
Please Wait while comments are loading...

Social Counting