திடீரென நிறுத்தப்பட்ட கூகுள் திட்டம், என்ன காரணம்.??

By Meganathan
|

நாம் அனைவருக்கும் அறிந்த கூகுள் நிறுவனம், நமக்குத் தெரியாமல் பல்வேறு திடங்களில் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றது. சில திட்டங்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். அது போல் பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் நமக்குத் தெரியாமலேயே ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது போல் சில மாதங்களுக்கு முன் நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் ப்ராஜக்ட் அரா (Project Ara).

ஸ்மார்ட்போன் கருவிகளின் அடுத்த தலைமுறை கருவிகளாக மாட்யூலர் போன்கள் பார்க்கப்படுகின்றன. அந்த வரிசையில் கூகுள் சார்பில் தயாரிப்பு பணிகளில் இருந்த திட்டம் தான் ப்ராஜக்ட் அரா. ஸ்மார்ட்போன் பாகங்களை நமது விருப்பம் போல் மாற்றியமைத்துக் கொள்ள இந்த மாட்யூலர் போன்கள் வழி செய்யும்.

அறிவிப்பு:

அறிவிப்பு:

இதற்கான முன்னோட்ட அறிவிப்புகளை இந்த ஆண்டு மே மாதம் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு இறுதியில் டெவலப்பர் பதிப்பு கருவி வெளியாகும் என்றும் 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தக் கருவிகள் நம் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தடை:

தடை:

இந்நிலையில் கூகுள் மாட்யூலர் போன் திட்டமான ப்ராஜக்ட் அரா சார்ந்த தனது பணிகளை தடை செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்தி:

செய்தி:

வன்பொருள் சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கூகுள் நிறுவனம் முயற்சித்து வருகின்றது. இதன் காரணமாக கூகுள் தனது பல்வேறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதால் ப்ராஜக்ட் அரா தற்சமயம் தடை செய்யப்பட்டிருக்கலாம் என ராய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோல்வி:

தோல்வி:

ப்ராஜக்ட் அரா 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டாலும், தயாரிப்பு, பயன்பாடு, அதிக விலை போன்று பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தோல்வியைத் தழுவ நேரிடும்.

நம்பிக்கை:

நம்பிக்கை:

தோல்வியைச் சந்திப்பதை விடக் கருவிகளை வெளியிடாமல் இருப்பது நல்லது. இருந்தாலும் கூகுள் நிறுவனம் இந்தத் திட்டத்தை முழுமையாகக் கைவிடாது என்பதே பலரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Google Suspends Modular Phone Project Ara Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X