உயிர் பயம் : கூகுளில் 'தெறிக்கும்' குரான் வரி தேடல்..!!

Written By:

தீவிரவாதிகள் சமீபத்தில் (ஜூலை 01 அன்று) வங்காள தேசத்தில் உள்ள டாக்காவில் நடத்திய தாக்குதலில் அயல்நாட்டினர், வங்கதேசத்தினர் மற்றும் காவல்துறையினர் உட்பட 22 பேர் உயிர் இழந்துள்ளனர் இந்த "பயங்கரவாத செயலுக்கு சர்வதேச சமூகங்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தீவிரவாதிகள் கொலை செய்ய குறிப்பிட்ட மக்களை தேர்வு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன..!

அதாவது யாரெல்லாம் இஸ்லாமியர்கள் என்று தெரிந்துக்கொள்ள ஒரு சிறிய சோதனை ஒன்றை நடத்தி அதில் தோல்வியுற்றவர்களை தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றுள்ளனர்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இஸ்லாமியர்கள் :

யாரெல்லாம் இஸ்லாமியர்கள் என்பதை தெரிந்துகொள்ள, பிடிபட்டவர்களிடம் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் இருந்து வரிகளை சொல்லுமாறு கேட்டுள்ளனர்.

கொடூரமாக கொலை :

குரான் வரிகளை சொல்ல தெரியாதவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டு அவர்களை கொடூரமாக கொலை செய்துள்ளனர் தீவிரவாதிகள்.

இரவு உணவு :

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மறுகையில் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு இரவு உணவு வழங்கியதாக பிடிபட்டு உயிர்த்தப்பிய ஒருவரின் தாயார் வங்காள தேச பத்திரிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

தேடல் :

இதனை தொடர்ந்து "பயங்கரவாதிகளிடம் இருந்து என் உயிரை காப்பாற்றிக்கொள்ள குர்ஆனின் எந்த பிரார்த்தனை வரிகளை கற்க வேண்டும்" என்ற தேடல் கூகுளில் மிக அதிகமாக தேடப்பட்டு வருகிறது.

ஆதரவு :

வாட்ஸ்ஆப், ட்வீட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் பயங்கரவாதிகளிடம் இருந்து உயிர் தப்பிக்க ஒரு சில குரான் வரிகளை கற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய தவறில்லை என்ற ஆதரவும் எழுந்துள்ளது.

தரவு :

கூகுள் தேடலின் தரவுகளின் அடிப்படையில் குரான் வரிகள் அதிகம் தேடப்படுவதை காண முடிகிறது..!

எப்போதும் இல்லாத அளவில் :

ரமலான் பண்டிகை நேரத்தில் கூட மிக குறைந்த அளவிலான குரான் வரிகள் தேடல் நிகழ்ந்துள்ளது ஜுலை 1 மற்றும் 2-ஆம் தேதியில் தான் அந்த தேடல் எப்போதும் இல்லாத அளவில் உச்சத்தை எட்டியுள்ளது.

தீவிரவாத முறை :

இப்போது வரையிலான குரான் வரிகள் சார்ந்த கூகுள் தேடல் உயரத்தை நோக்கி சென்று கொண்டே தான் இருக்கிறது என்பதும்,குர்ஆனின் வரிகளை கேட்டு இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை கண்டுபிடிக்கும் தீவிரவாத முறை ஒன்றும் முதல்முறை அல்ல என்பதும் குறிப்பித்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Google Searches For 'Quran Verses' Spike After Dhaka Terrorists Use Them To Check Who To Kill. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்