குவாட்ரூட்டர் பிழை, யாரும் பயம் கொள்ள வேண்டாம் : கூகுள்!

Written By:

சுமார் 90 கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு பிழை மூலம் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது. குவாட்ரூட்டர் என்ற பிழை வாடிக்கையாளர்களின் தகவல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட இந்தப் பிழை குறித்து வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் வெளியிட்ட அறிக்கையில் 'கூகுள் பிளே ஸ்டோரில் குவாட்ரூட்டர் பிழையை பயன்படுத்த நினைக்கும் செயலிகளை வெரிஃபை ஆப் அம்சம் தடுத்து நிறுத்தி விடும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

செக் பாயிண்ட்

'செக் பாயிண்ட் நிறுவனத்தின் ஆய்வு முயற்சியை நாங்கள் பாராட்டுகின்றோம். இது போன்ற ஆய்வுகள் மொபைல் தளத்தினை பரவலாக பாதுகாக்கும். குவாட்ரூட்டர் மூலம் ஏற்படும் நான்கு பாதிப்புகளில் மூன்று பாதிப்புகளை ஏற்கனவே தடுத்து நிறுத்தப்பட்டு விட்டன.

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு

நான்காவது பாதிப்பான CVE-2016-5340, அடுத்து வெளியாகும் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு வழிமுறைில் சரி செய்யப்பட்டு விடும்' எனக் கூகுள் நிறுவனத்தின் செய்தி பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ செயலி

இது போன்ற பிழைகள் ஏற்படக் காரணமாக பயனர்களும் இருக்கின்றனர். இது போன்ற ஆபத்துகளைத் தவிர்க்க பயனர்கள் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மென்பொருள்

செக் பாயிண்ட் மென்பொருள் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் மொத்தம் 90 கோடி ஆண்ட்ராய்டு கருவிகள் பாகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிறுவனம் மொத்தம் நான்கு பாதிப்புகளை குவால்காம் நிறுவனத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு

செக் பாயிண்ட் நிறுவனத்தின் படி பயனர்கள் இது போன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருக்க புதிய வகை ஆண்ட்ராய்டு பதிப்பினை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

கூகுள் நெக்சஸ்

கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் / 6 / 6பி, எச்டிசி 10, எல்ஜி ஜி5, ஒன் பிளஸ் 3, மோட்டோ எக்ஸ் (2016), சாம்சங் கேலக்ஸி எஸ்7 / எஸ் 7 எட்ஜ், பிளாக்பெரி DTEK50 போன்ற புதிய வகை கருவிகளும் இந்த பாதிப்பிலிருந்து தப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெரிஃபை ஆப்ஸ்

வெரிஃபை ஆப்ஸ் அம்சமானது ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளங்களைப் பயன்படுத்தும் கருவிகளில் ஏற்கனவே ஆக்டிவேட் செய்யப்பட்டுள்னன. பழைய இயங்குதளங்களைப் பயன்படுத்துவோர் செட்டிங்ஸ் சென்று வெரிஃபை ஆப்ஸ் ‘Verify Apps' அம்சத்தினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Google says most users are protected from QuadRooter Android bug Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்