கடன் வாங்கி அமெரிக்கா சென்ற சுந்தர் பிச்சை...!

Posted by:

உலகின் மிகவும் பிரபல நிறுவனம், உலக மக்களின் அனைத்து சந்தேகங்களையும் பொதுவாக தீர்த்து வைக்கும் பாரம்பரியம், இது தான் நாம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட கூகுள் நிறுவனம்.

பிரிக்கப்பட்ட கூகுள் - உண்மை பின்னணி..!!

தமிழர் பெருமையை உலகிற்கு கொண்டு சென்ற பல பிரபலங்களில், தனக்கென புதிய கட்டுப்பாடுகளுடன் எளிமையை பின்பற்றி வாழும் சுந்தர் பிச்சை அவர்களின் வாழ்க்கையை ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

சிலிகான் வேலியின் இந்திய புலிகள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சென்னையில் இரண்டே அறை கொண்ட வீட்டில் வாழ்ந்தார் சுந்தர், அச்சமயம் தொலைபேசியோ அல்லது கார் வசதியோ இல்லை.

1972 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிஎஸ்பிபி பள்ளியில் கல்வி கற்றார். இன்று அவருக்கு வயது 43.

இவரின் முழு பெயர் பிச்சை சுந்தர்ராஜன் ஆனாலும் இவர் சுந்தர் பிச்சை என்றே அறியப்படுகின்றார்.

பள்ளி படிப்பை முடிந்த சுந்தர் ஐஐடி கராக்பூரில் தனது பொறியியல் பட்டத்தை பெற்று பின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றார்.

சுந்தர் அமெரிக்கா செல்ல முதல் விமான பயணச்சீட்டினை பெற அவரது தந்தை கடன் வாங்கினார்.

1995 ஆம் ஆண்டு சுந்தர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தேர்ந்தார், பணத்தை மிச்சம் செய்வதற்காக தங்கும் விடுதியில் தங்கினார்.

பழைய பொருட்களை பயன்படுத்தி பணத்தை சேமித்ததோடு கல்விக்காக எதையும் தியாகம் செய்ய வில்லை.

சுந்தர் பிச்சை பிஎச்டி பட்டம் பெற ஆசை கொண்டிருந்தார், ஆனால் அவர் அதை செய்யாமல் மெக்கன்சி நிறுவனத்தில் பணியை துவங்கினார்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பணியை துவங்கினார்.

இன்று சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பெரிய பதவியை பெற்றிருப்பதோடு லார்ரி பேஜ் வாழ்க்கையில் நெருங்கிய நண்பராகவும் சுந்தர் திகழ்கின்றார்.

2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் சுந்தர் பிச்சை அவர்களை பணியில் சேர கேட்டு கொண்ட போது கூகுள் நிறுவனம் சுந்தர் அவர்களின் ஊதியத்தை ரூ.305 கோடியாக உயர்த்தியது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Read on to know 11 things about Sundar Pichai which most people don't know...
Please Wait while comments are loading...

Social Counting