கூகுள் ஃபைபர் போன் : சிறந்த சலுகை, குறைந்த கட்டணத்தில் லேண்ட்லைன் போன்.!!

Written by: Aruna Saravanan

தற்சமயம் ஸ்மார்ட்போன் வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் லேண்ட்லைன் சேவை மிகுதியாக குறைந்து வருகின்றது. ஆனால் ஃபைபர் போன் என்று லேண்ட்லைனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளனர். என்னதான் மொபைல் போன் வந்தாலும் லேண்ட்லைனின் சேவை மிகவும் உதவியாகவே இருக்கும் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது. இதில் சில முன்னேற்ற கூறுகளை கையாளுவதால் இதை மிகுதியாக புழக்கத்தில் கொண்டு வர முடியும்.

இந்த லேண்ட் லைன் ஃபைபர் போனில் கால் வெய்ட்டிங், அவசர எண் போன்றவையும் உள்ளது. அதோடு வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பொழுது அதை எழுத்து அல்லது இமெயில் எனும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. குத்துமதிப்பாக மாதத்திற்கு $10 அதாவது ரூபாய். 660 கட்டணம் செலுத்தினால் போதும் அன்லிமிடட் கால் செய்ய முடியும். தற்பொழுது ஒரு சில இடங்களில் இதன் பயன்பாடு உள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அன்லிமிடட்

மலிவு விலையில் தேசங்களுக்கு இடையில் அன்லிமிடெட் கால் செய்ய முடியும்.

எண்

இதற்கென நீங்கள் உங்கள் தொலைப்பேசி எண்ணை மாற்ற வேண்டாம். பழைய எண்ணிலேயே உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

தொந்தரவு

நீங்கள் குறிப்பிட்ட நபர்களிடம் பேசும் பொழுது மற்ற கால்களின் தொந்தரவு உங்களுக்கு இருக்காது. உங்களுக்கு தேவையானவர்களிடம் தேவையான நேரத்தில் பேசி மகிழ முடியும்.

மொபைல் கால்

நீங்கள் எங்கு இருந்தாலும் சரி உங்களை தொடர்பு கொள்ள லேண்ட்லைனில் பிடிக்க முடியாவிட்டால் உடனே மொபைலில் தொடர்பு கொள்ள முடியும்.

வாய்ஸ் மெயில்

உங்களுக்கு வரும் வாய்ஸ் மெசேஜை இமெயில் அல்லது டெக்ஸ்ட் வடிவில் பெற முடியும்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Google's Fiber Phone will offer Unlimited nationwide calling Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்