மொபைல் போன் தயாரிக்கிறார் 'சுந்தர் பிச்சை'..!!

Posted by:

எத்தனை நாளுக்கு தான் மற்ற நிறுவனங்களை நம்பி இருப்பது, விரைவில் களத்தில் இறங்க வேண்டும் என உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி கூகுள் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் விதமாக களத்தில் இறங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆண்ட்ராய்டு

ஆப்பிள் நிறுவனத்துடனான போட்டியை பலப்படுத்தும் நோக்கில் கூகுள் பிரான்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் புதிய முயற்சியை கூகுஷ் நிறுவனம் கையாள இருக்கின்றது.

நெக்சஸ்

தற்சமயம் வரை கூகுள் நிறுவனம் நெக்சஸ் கருவிகளை வடிவமைத்து, விற்பனை செய்து வருகின்றது.

தயாரிப்பு

கூகுளின் நெக்சஸ் கருவிகள் தயாரிப்பு பணிகளை உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஸ்டாக் ஆண்ட்ராய்டு

கூகுளின் நெக்சஸ் கருவிகளில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளமும் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் மற்றும் பூட்லோடர் போன்றவை வழங்கப்படுகின்றன.

அப்டேட்

மேலும் கூகுள் நெக்சஸ் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

ஒப்பந்தம்

நெக்சஸ் கருவிகளை தயாரிக்க கூகுள் நிறுவனம் எச்டிசி, சாம்சங், எல்ஜி, மோட்டோரோலா மற்றும் ஹூவாய் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கின்து குறிப்பிடத்தக்கது.

இரு கருவிகள்

கூகுள் வரலாற்றில் முதல் முறையாக இந்தாண்டின் செப்டம்பர் மாதத்தில் அந்நிறுவனம் இரு நெக்சஸ் கருவிகளை வெளியிட்டது, இந்த கருவிகள் முறையே எல்ஜி மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே

புதிய நெக்சஸ் கருவிகள் 5.2 மற்றும் 5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருந்ததோடு இவை நெக்சஸ் 5 எக்ஸ் மற்றும் நெக்சஸ் 6பி என அழைக்கப்பட்டது.

முடிவு

சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பது குறித்து கூகுள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது வரை வெளியாகாத நிலையில் விரைவில் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மேலும் படிக்க :

தினம் 'யூஸ்' பண்றோம்.. ஆனா இது தெரியாம போச்சே..!!

தெரியுமா..? கூகுள், உங்களை தற்கொலை செய்து கொள்ள விடாது..!

English summary
Google plans manufacturing its own smartphone. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்