அதிக வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ்: விரைவில் அறிமுகம்

Google might Launch Android Jellybean OS Soon

பல நுணுக்கமான தொழில் நுட்பங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்று செல்லும் கூகுள் இன்னொரு வெற்றி வாகையை சூட தயாராகி கொண்டு இருக்கிறது. கூகுள் நிறுவனம் ஜெல்லிபீன் என்ற புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்க இருக்கிறது.

ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஓஎஸ் அற்புதமான வரவேற்பினை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வருகிறது. இந்த ஜெல்லிபீன் தொழில்நுட்ப வசதி நெட்புக் மற்றும் டேப்லட்டிலும் கூட அளிக்கப்பட உள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட், ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் தொழில் நுட்பத்தினை போல இந்த புதிய ஜெல்லிபீன் தொழில் நுட்பமும் எலக்ட்ரானிக் பிரியர்களிடம் அதிக வரவேற்பினை பெறும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஜெல்லிபீன் தொழில் நுட்பத்தினை கூகுள் கூடிய விரைவில் வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...