காணாமல் போன ஐபோன்களை கண்டுபிடிக்க கூகுள் வழி செய்யும்.!!

By Meganathan
|

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் அதனினை எளிமையாக கண்டு பிடிக்க கூகுள் புதிய அம்சம் ஒன்றினை வழங்கியுள்ளது. இந்த அம்சமானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கும் பயன் தரும். முன்னதாக அந்நிறுவனம் இது போன்ற அம்சங்கள் வழங்கியுள்ளது. தற்சமயம் வழங்கியிருக்கும் அம்சம் புதிய அப்டேட் போன்று வழங்கப்பட்டுள்ளது.

1

1

முன்னதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் டிவைஸ் மேனேஜர் மூலம் கணினியில் இருந்து தொலைந்த கருவியை ரிங் செய்வது, லொகேட் செய்வது அல்லது கருவியில் இருக்கும் தரவுகளை முழுமையாக அழிக்க முடியும்.

2

2

இதோடு தொலைந்த கருவியை தேடலில் "find my phone" என டைப் செய்தும் லொகேட் செய்ய கூகுள் வழி செய்தது குறிப்பிடத்தக்கது.

3

3

தற்சமயம் வழங்கப்பட்டிருக்கும் அப்டேட் மூலம் இனி "find my phone" என்ற ஆப்ஷனினை My Account பக்கத்தில் பார்க்க முடியும். இங்கு காணாமல் போன கருவியை மீட்க பல வழிகளை காண முடியும்.

4

4

தொலைந்த கருவியை கண்டுபிடிக்க ரிங் செய்தல், கருவியை லாக் செய்தல், போனிற்கு அழைப்பு விடுத்தல், கணக்குகளில் இருந்து வெளியேறுதல் (சைன்-அவுட்). தொலைதொடர்பு நிறுவனத்தை தொடர்பு கொள்வது, அவசர உதவியை பெறுதல், தரவுகளை அழிப்பது போன்ற ஆப்ஷன்கள் My Account இல் வழங்கப்பட்டுள்ளன.

5

5

நாம் தொலைத்த கருவிகளை மீட்கும் அதிகபட்ச வாய்ப்பினை வழங்கும் விதத்தில் இம்முறை வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் இருக்கின்றது.

6

6

கூகுள் பிரான்டு கருவிகளை தவிர்த்து ஐபோன் பயனர்கள் ஐக்ளவுட் மூலம் தங்களது ஐபோன் / ஐபேட் கருவிகளை மீட்க முடியும்.

7

7

பொதுவாகவே My Account பக்கமானது கூகுள் ஆப்களில் இருப்பதோடு வாடிக்கையாளர்கள் ஒகே கூகுள் பயன்படுத்தி "show me my Google account" என கூற முடியும்.

8

8

கூகுளை பொருத்த வரை வாடிக்கையாளர்களின் தரவுகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும், இதன் ஒரு அம்சமாகவே புதிய அம்சங்கள் வழங்கரப்பட்டுள்ளன, என கூகுள் மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Google Lets You Find Lost Android And iPhones Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X