வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியான அல்லோ, நீங்கள் பதிவிறக்கம் செய்தீர்களா.??

Written By:

பிரபல தேடுபொறி நிறுவனமாகக் கூகுள் குறுந்தகவல் போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் குறுந்தகவல் செயலிான அல்லோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த குறுந்தகவல் செயலியான கூகுள் அல்லோ, தன்னுள் தேடுபொறி திறன் கொண்ட கூகுள் அசிஸ்டண்ட் சேவையையும் வழங்குகின்றது.

வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியான அல்லோ, நீங்கள் பதிவிறக்கம் செய்தீர்களா.??

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியைப் போல் கூகுள் அல்லோ செயலியும் பயனர்களின் தனிப்பட்ட மொபைல் போன் நம்பரை அடித்தளமாகக் கொண்டு பயனர் கணக்குகளை வழங்குகின்றது. இதோடு பயனர்கள் கூகுள் அல்லோ செயலியுடன் தங்களது கூகுள் கணக்குகளையும் இணைத்துக் கொள்ள முடியும்.

தேடுபொறி அம்சத்தினை முதன்மையாகக் கொண்டிருக்கும் கூகுள் அல்லோ செயலியில் பயனர்கள் @google என டைப் செய்து தங்களது கேள்விகளை டைப் செய்தால் கூகுள் உங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கும். இதனால் சாட் செய்யும் போது ஒரே திரையில் கூகுள் தேடல்களையும் மேற்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு மூலம் சக்தியூட்டப்படும் கூகுள் தேடல் அம்சமானது அந்நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்தைச் சார்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியான அல்லோ, நீங்கள் பதிவிறக்கம் செய்தீர்களா.??

முழுமையான என்க்ரிப்ஷன் சேவை, உடனுக்குடன் சாட்கள் அழுந்து போகும் அம்சங்களுடன் கூகுள் நிறுவனம் தனது இன்காக்நிட்டோ அம்சத்தையும் அல்லோ செயலியில் வழங்கியுள்ளது. பயனர்கள் நேரத்தைக் குறித்து வைத்து தங்களுது குறுந்தகவல்களை அனுப்பினால் குறிக்கப்பட்ட நேரத்தில் குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும். குறைந்த பட்சம் 10 விநாடிகளில் இருந்து, 30 விநாடிகள், ஒரு நிமிடம், ஒரு மணி நேரம், ஒரு நாள் அல்லது அதற்கும் அதிகமான நேரத்தைக் குறிக்க முடியும்.

பல்வேறு நாடுகளுக்கு ஏற்ப வித்தியாசமான எமோஜிக்கள் மற்றும் பிரத்தியேக ஸ்டிக்கர்களையும் கூகுள் அல்லோ கொண்டுள்ளது. மேலும் டாக்குமெண்ட் பகிர்வு, அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Google launched Allo messaging app to contend WhatsApp Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்