மர்மமான 'ரேடியோ டிரான்ஸ்மிட்டர்' கட்டமைக்கும் கூகுள், ஏன்..?

|

உலகின் மாபெரும் தேடு பொறி நிறுவனமான கூகுள், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் இருக்கும் ஜோர்னடா டெல் முர்டோ பாலைவனத்தில் அமைந்துள்ள ஸ்பேஸ்போர்ட்டில் மர்மமான ஒரு 'ரேடியோ டிரான்ஸ்மிட்டரை கட்டமைக்கும் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளது.

மிகவும் ரகசியமாக கட்டமைக்கப்படும் கூகுளின் இந்த 'ரேடியோ டிரான்ஸ்மிட்டர்' ஏன் கட்டமைக்கப்படுகிறது என்ற பின்னணி பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

உரிமம் :

உரிமம் :

கூகுள் நிறுவனம் ஸ்பேஸ்போர்டில், ஒரு சோதனை டிரான்ஸ்மிட்டர் கட்டமைக்க உரிமம் கோரி அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது.

அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையம் :

அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையம் :

அது சார்ந்த உரிமத்தை தனது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடுவதற்கு முன்பு அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையம் அந்த உரிமத்தை ஒழுங்குப் படுத்தியுள்ளது, அதாவது மாற்றங்கள் செய்துள்ளது.

 திருத்தப்பட்ட உரிமம் :

திருத்தப்பட்ட உரிமம் :

அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட்ட திருத்தப்பட்ட உரிமம்..!

யூகங்கள் :

யூகங்கள் :

வெளியான உரிமம் மற்றும் சில யூகங்கள் கொண்டு, கூகுளின் மர்மமான ரேடியோ டிரான்ஸ்மிட்டரின் பயன்பாடு என்னவென்று பல கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இன்டர்நெட் வழங்கும்  முயற்சி :

இன்டர்நெட் வழங்கும் முயற்சி :

சில வதந்திகளின் படி, கட்டமைக்கப்படும் டிரான்ஸ்மிட்டர் ஆனது கூகுள், பலூன்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானங்கள் வழியாக இன்டர்நெட் வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மறுப்பு :

மறுப்பு :

ஆனால், கூகுள் நிறுவனமோ வணிக அடிப்படையில் திட்டம் தொடர்பான எந்த விவரங்களையும் வழங்கிட மறுத்துவிட்டது என்பதும் குறிபிடத்தக்கது.

ரேடியோ நெட்வொர்க் பேண்ட் :

ரேடியோ நெட்வொர்க் பேண்ட் :

ஒரு வினாடிக்கு பல ஜிகாபிட்ஸ் வேகத்தில், பல மைல் தூரத்திற்கு தகவல் கடத்தும் திறன் கொண்ட ரேடியோ நெட்வொர்க் பேண்ட்களை (radio network bands) கூகுள் நிறுவனம் பரிசோதனை செய்ய இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பான வழி :

சிறப்பான வழி :

அதுமட்டுமின்றி, இந்த முயற்சியில் 2.5 GHz பேண்ட் பயன்படுத்த இருக்கிறது என்ற தகவலும், இது விண்ணில் உள்ள பலூன்கள் மற்றும் தரையில் உள்ள ட்ரான்ஸ்மிட்டர்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் சிறப்பான வழி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆவணங்கள் :

ஆவணங்கள் :

2015 ஆம் ஆண்டு மத்திய தகவல் தொடர்பு ஆணையம் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் கூகுள் நிறுவனம் தனது இன்டர்நெட் வழங்கும் ஆளில்லா விமானத்தின் ரேடியோ தொழில்நுட்பத்தை சுமார் 25,000 அடி உயரத்தில் இருந்தபடி சோதனை செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ராஜக்ட் எக்ஸ் :

ப்ராஜக்ட் எக்ஸ் :

இவ்வகை விமானங்கள் கூகுளின் ப்ராஜக்ட் எக்ஸ் திட்டத்தின் கீழ் இயங்குகிறது என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது. மேலும் இந்த விமானங்கள் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும், சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானங்கள் ஆகும் என்பதும் குறிபிடத்தக்கது.

24 மாதங்கள் :

24 மாதங்கள் :

இந்த சோதனை மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கு எந்த விதமான தொல்லையும், தீங்கும் நேராது என்றும், இந்த சோதனை 24 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்தியாவை பார்த்து 'மீண்டும் ஒருமுறை' வாயைப்பிளக்க போகின்றன உலக நாடுகள்..!


இண்டர்நெட் பயன்பாடு : ஆபத்தில் சிக்காமல் இருக்க உடனடியாக செய்ய வேண்டியவை.!!


அமெரிக்காவிற்கே எச்சரிக்கை : வடகொரியாவிற்கு 'கட்டம்' சரியில்லை..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Google Is Building A Mysterious Radio Transmitter. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X