வந்துவிட்டது கூகுள் ஹோம்.!

நமது அன்றாட வேளைகளில்-தேவைகளில் உதவி புரிவதற்காக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது புதிய 'கூகுள் ஹோம்'

By Ilamparidi
|

உலகின் பெரும்பான்மையான தகவல்களை தன்னுள் கொண்டு இணையத் தேடல்களை நமக்கு எளிதாக்கி தரக்கூடிய நிறுவனமான கூகிளைத் தெரியாது இணையத்தை பயன்படுத்துவோர் எவரும் இருக்க முடியாது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு 1998ல் லாரி பேஜ் ,சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனமான கூகுள் உலகம் முழுவதுமாக ஒரு மில்லியனுக்கும் மேலாக தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது ஒரு நாளில் ஒரு மில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்து நான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களை சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இது இணைய தேடலுடன் கூகுள் மெயில்,கூகுள் டாக்குமெண்ட்டுகள்,கூகுள் பிளஸ்,கூகுள் வரைபடம்,கூகுள் நியூஸ்,பிளாக்கர்,யூ டியூப் உள்ளிட்ட வற்றைக் கொண்டு செயல்படுகிற இணைய தேடல்களை நமக்கு எளிதாக்கி தருகிற நிறுவனத்தின் புதிய சேவை தான் கூகுள் ஹோம்.

ஸ்மார்ட் காலம்:

ஸ்மார்ட் காலம்:

முன்பெல்லாம் அரசர்கள் இடுகின்ற கட்டளைகளை அவரின் சேவகர்கள் செய்வார்கள்.ஆனால் இப்போது நாம் எல்லோருமே அரசர்கள் அல்லவா.அதோடு இதுவும் ஸ்மார்ட் காலம் அல்லவா ஆகையால் நமக்காக நமது தினசரி வேளைகளில் உதவிபுரிய வந்துவிட்டது 'கூகுள் ஹோம்'. நாம் சொல்வதத்தைக் கேட்டு அதன் மற்ற சேவைகளில் தேடி நமக்கான பதிலை தரக்கூடிய ஒரு சிஸ்டம் தான் கூகிள் ஹாம்.இதனை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் யுகத்தை ஆளக்கூடிய கூகிள் நிறுவனம் தான்.

வாய்ஸ் அசிஸ்டென்ட் :

வாய்ஸ் அசிஸ்டென்ட் :

நாம் தினசரி மேற்கொள்கின்ற நமக்கான பணிகளில் ஏதேனும் உதவி என்றால் நாம் வேறு எவரையும் நாடாமல் நேரடியாக கூகிள் ஹோமினை பயன்படுத்தியே நமக்கான உதவியினை பெறலாம்.காலையில் கிளைமேட் எப்படி இருக்கு எனக் கேட்டல் கூகுள் வெதரில் நமக்கான பதிலளித்த தேடிக்கூறும்.அதேபோல் இன்றைய நாள் என்ன எனக் கேட்டால் கூகிள் காலண்டரில் தேடி பதில் கூறும்.மேலும் இணையத்தில் இப்போதைய ட்ரெண்ட் என்னவெனக் கேட்டால் அதனையும் உடனே தேடிக்கூறும் இந்த கூகிள் ஹோம்.

என்னென்ன தேவை :

என்னென்ன தேவை :

இப்படியான கூகிள் ஹோமில் என்னென்ன இருக்கும் என பார்த்தால் ப்ளூடூத் அல்லது வை பை மூலம் கனெக்ட் செய்யப்பட்ட ஒரு ஸ்பீக்கர்,நமது குரலை நுண்ணிய அளவென்றாலும் கண்டறியக்கூடிய மைக்குகள்,இறுதியாக இதன் ஆர்டிபிசியல் இண்டிலெஜென்ஸ் புராசஸர் ஆகியவையே ஆகும்.நீந்கள் சொல்வதை மைக் மூலம் கேட்டு புராஸசர் வழியே இணையத்தில் தேடி ஸ்பீக்கர் வழியே நமக்கான பதிலைக் கூறிவிடும்.

இதற்கு முன்பே:

இதற்கு முன்பே:

ஆனால் இது போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட்கள் உருவாக்கப்படுவது இதுவே முதன் முறை அல்ல.இதற்கு முன்பே ஆப்பிள் போன்களில் 'சிறி' என்றதும் அமேசான் நிறுவனம் 'எக்கோ' என்ற வாய்ஸ் அசிஸ்டென்ட்களையும் உருவாக்கி உள்ளன.ஆனால் ஸ்பெஷல் கூகிள் ஹோம் தான் ஏன் என்றால் மற்றவை யாவும் மொபைல் அளவில் செய்யக்கூடியதை இது வீடு முழுக்க செய்வது தான் இதன் சிறப்பம்சம்.

முன்னணி நிறுவனங்களுடன்:

முன்னணி நிறுவனங்களுடன்:

கூகுள் ஹோம் சேவைக்காக கூகிள் நிறுவனம் வீடு உபயோகப்பொருட்களை தயாரிக்கிற பல முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்க்கிறது அவ்வாறு வீட்டுஉபயோக ஸ்மார்ட் பொருட்களையும் நாம் நமது குரல் மூலமாகவே இயக்க இயலும்.

க்ரோம் காஸ்ட்:

க்ரோம் காஸ்ட்:

இந்தப் பொருள் கூகிள் ஹோமின் கூடவே வரக்கூடியதாகும். கூகிள் ஹோமின் சிறப்பம்சம் எனக்குடா இதனைக் குறிப்பிடலாம் ஏனெனில் வீட்டிலுள்ள மைக் பொருத்தப்பட்ட எல்லா அறைகளையும் இது ஒருங்கிணைக்கும்.

பெயர் சூட்டப்படவில்லை:

பெயர் சூட்டப்படவில்லை:

ஆப்பிளின் இது போன்ற சேவைக்கு சிறி எனவும் அமேசான் நிறுவனக்கருவிக்கு அலெக்ஸா எனவும் பெயர் வைக்கப்பட்டது ஆனால் கூகிளின் இந்த கூகிள் ஹோம் சேவைக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.இன்னும் தமிழிற்கு வர சிறிது நாள் ஆகலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அதிநவீன டெக்னாலஜி வசதிகள் கொண்ட 10 ஸ்மார்ட்போன்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Google introduce its new google home.Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X