மோடியுடன் கூட்டு சேரும் கூகுள்..!

|

இன்டர்நெட் உலகின் பிரதானமாய் திகழும் கூகுள் இந்திய அரசாங்கதோடு கைகோர்த்து இன்டர்நெட் இணைப்பு திட்டம் ஒன்றை செயல் பட இருக்கிறது.

கூகுள் லோகோ - ஒரு ப்ளாஷ்பேக்..!

அந்த திட்டத்தின் மிகவும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த இன்டர்நெட் திட்டமானது முழுக்க முழுக்க பலூன் மூலம் செயல்பட இருக்கிறது என்பதுதான், இந்த திட்டத்தின் பெயரே - ப்ராஜக்ட் லூன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் காண்போம்..!

திட்டம் :

திட்டம் :

உலக நிலப்பரப்பில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்தில் பலூன்களை பறக்க விட்டு அதன் மூலம் இன்டர்நெட் வசதியை வழங்கும் திட்டம் தான் ப்ராஜக்ட் லூன்.

ஒலிபரப்பு :

ஒலிபரப்பு :

உலக நிலப்பரப்பில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்தில்தான் இணைய சேவைகளுக்கான ஒலிபரப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி :

வெற்றி :

மேலும் இந்த பலூன் மூலம் இன்டர்நெட் பெரும் திட்டத்தை நியூஸிலாந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் பிரேசில் ஆகிய இடங்களில் நடைமுறை படுத்தப்பட்டு வெற்றி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரோன்கள் மூலம் இன்டர்நெட் :

ட்ரோன்கள் மூலம் இன்டர்நெட் :

முதலில் கூகுள் நிறுவனம் ப்ராஜாக் லூன் உடன் ட்ரோன்கள் மூலம் இன்டர்நெட் வசதியை வழங்கும் திட்டம் பற்றியும் இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது.

அனுமதி :

அனுமதி :

ஆனால் இந்திய அரசாங்கமோ ப்ராஜக்ட் லூன் திட்டத்திற்கு மட்டும் தான் அனுமதி வழங்கியுள்ளது.

பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரம் :

பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரம் :

அதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் தற்போது இந்திய நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் இணைந்து பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரம் (2.6 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்) தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய இருக்கிறது.

40 கிலோ மீட்டர் :

40 கிலோ மீட்டர் :

மற்றும் ப்ராஜக்ட் லூன் திட்டத்தின்படி 20 கிலோ மீட்டர் உயரத்தில் மிதக்கும் பலூன்கள் மூலம் சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வயர்லெஸ் இன்டர்நெட் வசதி (எல்டிஈ மற்றும் 4ஜி) கிடைக்கும் என்று விளக்கம் அளித்துள்ளது கூகுள்.

சூரிய சக்தி :

சூரிய சக்தி :

வானில் மிதக்கும் கூகுள் பலூன்கள் சூரிய சக்தி மற்றும் காற்றின் மூலம் கிடைக்கப் பெரும் சக்தியை கொண்டு இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ட்ரோன்கள் :

8 ட்ரோன்கள் :

இந்திய அரசாங்கம் ட்ரோன்கள் மூலம் இன்டர்நெட் வசதியை பெறும் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தால் சூரிய சக்தி மூலம் இயங்கும் 8 பெரிய அளவிலான ட்ரோன்கள் அதில் பயன்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
இந்தியாவில் அறிமுகமாகும் ப்ராஜக்ட் லூன். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X