கூகுள் எர்த் மூலம் இணைந்த குடும்பம்!!!

Written By:

இணையத்தில் பல வசதிகளை நமக்கு அள்ளிதரும் கூகுளால் தினமும் ஏதோ ஒரு நல்ல காரியம் கூகுளால் நடந்த வண்ணம் தான் உள்ளது நண்பரே.

அந்த வகையில் தற்போதைய கூகுளின் சாதனை என்னவென்றால் 26 வருடங்களுக்கு முன்பு தொலைந்த நபர் ஒருவர் தற்போது தன் வீட்டினை கண்டுபிடித்து மீண்டும் அவர்களுடன் சேர்ந்துள்ளான்.

இது நடந்தது இந்தியாவில் தாங்க சரோ என்ற பெயருடயை அவர் 26 வருடங்களுக்கு முன்பு தனது சகோதரனுடன் கொல்கத்தா வந்த போது அவரது சகோதரன் சரியாக கீழே இறங்கி விட்டார்.

ஆனால், சரோ தூங்கிவிட்டதால் கொல்கத்தாவில் இருந்து 1500 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று விட்டார் அதன்பிறகு அவர் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவரது முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

கூகுள் எர்த் மூலம் இணைந்த குடும்பம்!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அதன் பிறகு ஒரு சிறுவர் காப்பகத்தில் அவர் வளர்ந்தார் பின்னர் அங்கு வந்த ஆஸ்திரேலிய தம்பதி அவரை தத்தெடுத்து ஆஸ்திரேலியா அழைத்து சென்றனர் அதன் பின்னர் அவர் வளர்ந்தது எல்லாம் அங்கு தான்.

சிறிது நாட்களுக்கு அவர் ஏதேச்சையாக இன்டர்நெட் பயன்படுத்தி கொண்டிருக்கும் போது கூகுள் எர்த் பற்றி கேள்விப்பட்டார் சரோ, பின்னர் அதில் தான் தொலைந்த மற்றும் பிற விவரங்களை அதில் போட்டு தேடினார்.

இதன் மூலம் அவரது குடும்பத்தை அவர் அடையாளம் கண்டுகொண்டார் சரோ இப்போது அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்