எது பெஸ்ட்? கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்

இரண்டில் எது பெட்டர் தெரியுமா? கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்

By Siva
|

நம்முடைய முக்கியமான ஃபைல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றின் இன்னொரு பிரதியை பாதுகாத்து வைக்க நாம் பயன்படுத்தி வருவது கூகுள் டிரைவ் அல்லது டிராப் பாக்ஸ் என்பது அனைவரும் தெரிந்ததே.

எது பெஸ்ட்? கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்

இண்டர்நெட்டில் நமது உடைமைகளை பாதுகாக்க பல அம்சங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது கூகுள் டிரைவ் அல்லது டிராப் பாக்ஸ்தான். ஆனால் இந்த இரண்டில் எதை அதிகம் அல்லது எதை பயன்படுத்துவது என்பதில் ஒருசிலருக்கு குழப்பம் இருக்கலாம்.

இரண்டுமே டெக்ஸ்டாப் மற்றும் மொபைல் ஆப் வசதியை பெற்றிருந்தாலும் ஒருசில காரணத்தால் இரண்டில் ஒன்று கூடுதல் வசதியுடன் இருக்கும் அல்லவா? அதை எப்படி கண்டுபிடிப்பது? வாருங்கள் பார்ப்போம்

கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்: அக்கவுண்ட்

கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்: அக்கவுண்ட்

இரண்டு க்ளவுட் சேவைகளும் இலவச ஸ்டோரேஜ்களை பயனாளிகளுக்கு தருகிறது. ஆனால் கூகுள் டிரைவ் நமக்கு 15 GB அளவையும், டிராப் பாக்ஸ் 2GB அளவையும் தருகிறது.

இதை வைத்து பார்த்தால் நமக்கு கூகுள் டிரைவ் பெட்டர் என்று தோன்றும். ஆனால் அதே நேரத்தில் டிராப் பாக்ஸில் ரெஃப்ரல்களை இணைப்பதன் மூலமும், மொபைலில் இருந்து கேமிரா அப்லோடை இணைப்பதன் மூலமும் அவ்வப்போது நமக்கு கிடைக்கும் இலவச ஸ்டோரேஜ்களை அதிகரித்து கொள்ளலாம்.

ரெஃப்ரல்கள் மூலம் 500 MB அளவையும் கேமிரா அப்லோட் மூலம் 3GB அளவையும் கூடுதலாக இலவச ஸ்டோரேஜ்கள பெறும் வாய்ப்பு டிராப் பாக்ஸில் உள்ளது. மேலும் இரண்டு சேவைகளுமே $99க்கு 1TB அளவுக்கு ஸ்டோரேஜை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி கூகுள் 100 GB முதல் 1TB வரையிலான கட்டண சேவைகளில் ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது.

கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்: பிளாட்பார்ம்

கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்: பிளாட்பார்ம்

கூகுள் டிரைவ் எந்தெந்த பிளாட்பார்களில் செயல்படும் என்பதை பார்க்கும்போது டெக்ஸ்டாப்பை பொருத்தவரியில் விண்டோஸ், மேக் ஓஎஸ் X ஆகியவற்றுக்கு அதிக அளவில் சப்போர்ட் செய்யும். ஆனால் லீனக்ஸ் ஓஎஸ்-இல் இது செயல்படாது.

ஆனால் அதே நேரத்தில் டிராப் பாக்ஸின் நிலைமை அப்படி இல்லை. விண்டோஸ், மேக், லீனக்ஸ் ஆகிய ஓஎஸ்களுக்கு சப்போர்ட் செய்வதுடன் ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட், பிளாக்பெர்ரி, கிண்டில் ஃபையர் மற்றும் விண்டோஸ் போன் ம்பைல் மற்றும் டேப்ளட் பிளாட்பார்களிலும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்

ப்ரைம் மெம்பருக்கு சக்கரை பொங்கல், மற்றவர்களுக்கு வெறும் பொங்கல்.!ப்ரைம் மெம்பருக்கு சக்கரை பொங்கல், மற்றவர்களுக்கு வெறும் பொங்கல்.!

கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்: பாதுகாப்பு தனித்தன்மை

கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்: பாதுகாப்பு தனித்தன்மை

பாதுகாப்பை பொருத்தவரையில் டிராப் ஆக்ஸ் 256 பிட் AES என பலமான பாதுகாப்பு உள்ளது.ஆனால் அதே நேரத்தில் கூகுள் டிரைவ் 128 பிட் AES தரத்துடன் பாதுகாப்பு அளிக்கின்றது.

ஆனால் அதே நேரத்தில் SSL பாதுகாப்பை பொருத்தவரை கூகுள் டிரைவ் 256 பிட் SSL பாதுகாப்பும், டிராப் பாக்ஸ் 128 SSL பாதுகாப்பையும் பெற்றுள்ளது. மேலும் இரண்டு சேவைகளையும் இரண்டு ஸ்டெப் வெரிபிகேசன் வசதியுடன் உள்ளதால் இரண்டுமே பாதுகாப்பிற்கு பஞ்சமில்லை என்றே கூறலாம்

கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்: ஃபைல்கள் சப்போர்ட்

கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்: ஃபைல்கள் சப்போர்ட்

கூகுள் டிரைவை பொருத்த வரையில் சுமார் 30 வகையான பைல்களுக்கு சப்போர்ட் செய்யும். குறிப்பாக இமேஜ் பார்ப்பது, வீடியோ, ஆடியோ, டாகுமெண்ட் டெக்ஸ்ட், மார்க் அப், எம்.எஸ் ஆபிஸ், ஆப்பிள் மற்றும் அடோப் சாப்ட்வேர் உள்பட பல்வேறு பைல்கள் சப்போர்ட் செய்யும்

ஆனால் டிராப் பாக்ஸ் பக்கம் வந்தால் ஒருசில முக்கிய ஃபைல்களுக்கு மட்டுமே சப்போர்ட் செய்யும். குரிப்பாக பிரிவியூ டாக்குமெண்ட், பிரசண்டேஷன், ஸ்ப்ரெட்ஷீட், பேசிக் டெக்ஸ்ட், லிங்க், வீடியோ, ஆடியோ பைல்கள் ஆகியவைகளுக்கு சப்போர்ட் செய்யும். மேலும் ஆன்லைனில் ஃபைல்களை டவுன்லோடு செய்யவும், எடிட் செய்யும் சப்போர்ட் செய்யும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Mostly used cloud storage among users nowadays is Google Drive or Drop Box. We always keep a copy of our important documents or photos in cloud storage.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X