'மதுரைப்பெண்' ருக்மிணி தேவி : அஞ்சலி செலுத்தும் கூகுள், யார் இவர்..?

|

இன்று (29 பிப்ரவரி, 2016) 1930-களில் வாழ்ந்த, புகழ்பெற்ற நடனக்கலைஞரான ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களின் 112 ஆம் பிறந்த தினமாகும். அதையொட்டி உலகின் மாபெரும் தேடுப்பொறி தளமான கூகுள் நிறுவனம், கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

'மதுரைப்பெண்' ருக்மிணி தேவி : அஞ்சலி செலுத்தும் கூகுள், யார் இவர்..?

மஞ்சள் நிற உடை, தலை நிறைய பூ, நாட்டியத்திற்கே உரிய முத்திரை மொழி - என முழுக்க முழுக்க 'அழகியலில்' உருவான கூகுள் டூடுலில் புனிதமாய் புன்னகைக்கும் ருக்மிணி தேவி அருண்டேல் பற்றி ஒவ்வொரு தமிழனும், இந்தியனும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் சில இருக்கின்றனர்..!

மதுரை :

மதுரை :

ருக்மிணி தேவி - பிப்ரவரி 29-ஆம் தேதி 1904-ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மதுரையில் பிறந்தவர், தந்தையின் பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில் குடிபெயர்ந்தார்.

சதிர் :

சதிர் :

அக்கால கட்டத்திலேயே தனது பதினாறாம் வயதில், ஜார்ஜ் அருண்டேல் என்பவரை காதல் திருமணம் புரிந்து ஐரோப்பாவிற்கு பயணித்தார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளை கற்றுக்கொண்ட அவர் முதன்முறையாக சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தை காண நேரந்தது.

குறிப்பிட்ட சமூகம் :

குறிப்பிட்ட சமூகம் :

இந்திய சமூகத்தில் தேவதாசிகள் என்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நடனம் தான் சதிர் எனப்படும். அதைதான் பின்னாளில் 'பரதநாட்டியம்' என்று பெயரிட்டு பலரும் கற்க முனைப்பாக செயல்பட்டவர் தான் ருக்மிணி தேவி அருண்டேல்.

கற்றுதேர்ந்தார் :

கற்றுதேர்ந்தார் :

பலவகையான தடைகளை கடந்து மயிலாப்பூர் கௌரி அம்மா மற்றும் பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் சதிர் சதிர் என்ற பரதநாட்டியத்தை கற்றுதேர்ந்தார். பின்பு இந்த கலை பெருவாரியான மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கலாக்ஷேத்ரா என்ற கலைப்பள்ளியை ஆரம்பித்தார்.

விலங்குகளின் மீது அன்பு :

விலங்குகளின் மீது அன்பு :

இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தபோது விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இவர் காட்டிய ஆர்வமானது விலங்குகளின் மீது இவர் கொண்டிருந்த அன்பை வெளிபடுத்துகிறது.

மறுப்பு :

மறுப்பு :

குடியரசுத் தலைவர் பதவி ஏற்குமாறு அப்போதைய இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மணியை கேட்டுக்கொண்ட போது கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தவர் ருக்மிணி தேவி அருண்டேல்.

மரணமும் புகழும் :

மரணமும் புகழும் :

1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ருக்மிணி மரணமடைந்தப்பின், இந்திய பாராளுமன்றத்தினால் தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக கலாக்ஷேத்ரா அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற சிறப்புகளுக்காகவே தான், இன்று அவரின் பிறந்த தினத்தை கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்திரா காந்தியின் கேள்வியும், ராகேஷ் ஷர்மாவின் பதிலும்..!


ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Google doodle pays tribute to Rukmini Devi Arundale. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X