சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்கும் கூகுள் : கலக்கத்தில் ஆப்பிள்.!!

Written By:

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போன் கருவிகளைக் கூகுள் நிறுவனம் சொந்தமாக வெளியிடலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்சமயம் மொபைல் போன் ஆப்பரேட்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈட்டுப்பட்டிருக்கும் கூகுள் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை இந்த ஆண்டின் இறுதியில் அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01

புதிதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெளியிட இருக்கும் கூகுள் நிறுவனம் இந்தக் கருவிகளில் வடிவமைப்புகளில் அதிக கவனம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.

02

கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் கருவியில் அந்நிறுவனம் வன்பொருள் சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என தி டெலிகிராஃப் இணைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

03

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக இருக்கும் புதிய கூகுள் ஸ்மார்ட்போன் கருவியில் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் மென்பொருள் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட இருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

04

ஐஒஎஸ் இயங்குதளம் கனமாகவும், அதிக சுமை கொண்டதாக இருக்கின்றது எனக் கூகுள் வடிவமைப்பு துறையின் துணைத் தலைவர் மடியாஸ் டூயார்ட் தெரிவித்திருந்தார்.

05

கடந்த ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை தயாரிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. எனினும் அவற்றை கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

06

தற்சமயம் கூகுள் ஸ்மார்ட்போன் கருவிகளை தயாரிக்கும் திட்டம் ஏதும் கிடையாது மாறாக நெக்சஸ் கருவிகளில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படலாம் என சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தர்.

07

சொந்தமாக ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதால் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடனான உறவு பாதிக்கப்படாது என்றாலும், இது குறித்த தகவல்களை வழங்க கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டது.

08

ஒரு வேலை இத்தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுடனான போட்டி அதிகரிப்பதோடு ஆண்ட்ராய்டு கருவிகளின் தரம் உயரும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Google to develop own smartphone to compete iPhone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்