மங்கள்யானுக்கு மரியாதை செய்த கூகுள், டூடுள் மூலம் மங்கள்யானுக்கு வாழ்த்து

By Meganathan
|

செவ்வாய் கிரகத்தில் ஒரு மாதத்தை நிறைவு செய்த மங்கள்யானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கூகுள் நேற்று இரவே டூடுளை மாற்றியது. மங்கள்யான் படம் பொறித்த டூடுள் மற்ற டூடுள்களை விட பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. இந்த படம் பார்க்க அழகாகவும் 80களில் பாட புத்தகத்தில் தோன்றும் புகைப்படம் போல காட்சியளிக்கின்றது.

மங்கள்யானுக்கு மரியாதை செய்த கூகுள்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி விண்னில் ஏவப்பட்ட மங்கள்யான் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்தது, இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வராலாற்றில் மிக பெரிய சாதனையாக அமைந்தது.

இதை பாராட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாம் புதிய வரலாறு படைத்திருக்கிறோம், முடியாதது எதுவுமில்லை என்றளவு நெருங்கிவிட்டோம், இந்த வரலாற்று சாதனையை புரிந்த இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் 51 முறை முயற்ச்சி செய்யப்பட்டு 21 முறை தான் வெற்றி கிடைத்துள்ள நிலையில் இந்த சாதனையை நாம் முதல் முயற்சியிலேயே முடித்திருக்கிறோம்.

செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த மங்கள்யான் அங்கிருந்து பல புகைப்படங்களை அனுப்பியுள்ளது, அதில் ஒரு புகைப்படத்தில் முழு செவ்வாய் கிரகமும் தெளிவாக தெரிந்தது. மேலும் விலை குறைந்த விண்களமாக மங்கள்யானை தயாரிக்க மொத்த செலவும் 74 மில்லியன்களில் முடிந்து விட்டது.

Best Mobiles in India

English summary
Google celebrates Mangalyaan with a doodle. Here you will find the entire details of Mangalyaan and Google's doodle in India Today.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X