பலூன் இன்டர்நெட் திட்டத்தை விரிவு படுத்த கூகுள் திட்டம்

Written By:

கூகுள் நிறுவனம் லூன் எனும் திட்டத்தை சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பலூன்களை ஆகாயத்தில் பறக்க வைத்து அதன் மூலம் பல இடங்களுக்கு இன்டர்நெட் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை பல நாடுகளில் அமல்படுத்த அந்நிறுவனம் முயன்று வருவதாக அந்நிறுவனம் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் பதிவு செய்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலூன் இன்டர்நெட் திட்டத்தை விரிவு படுத்த கூகுள் திட்டம்

லூன் திட்டத்தின் மூலம் பூமியில் இருந்து 20 கிமீட்டர் தொலைவில் பலூன்களை பறக்க விட்டு, மென்பொருள் அல்கோரிதம் மூலம் காற்றின் விசைக்கேற்ப செயல்படும். நியுசிலாந்து நாட்டில் இந்த திட்டத்தின் மூலம் 30 பலூன்கள் பறக்க விடப்பட்டிருந்தது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூகுள் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 20 பலூன்களை பறக்க விட திட்டமிட்டிருந்தது.

ஆட்டோஃபில் எக்யூப்மென்ட் மேம்படுத்தப்பட்டிருப்பதால் முன்பை விட 10 மடங்கு அதிகமாக ஆகாயத்தில் நீடிக்க முடியும். 2013 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பலூன்கள் 100 முதல் 130 நாட்கள் வரை நீடித்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்