கூகுள் ஆப், இனி ஆப்லைன் தேடல்களை ஆதரிக்கும்.!

நீண்ட காலமாக கூகுள் ஆப்லைன் சேவை திறன்களை மேம்படுத்த முயற்சி நடந்து கொண்டிருந்தது.

Written By:

கூகிள் சில அழகான மற்றும் சுவாரஸ்யமான ஆப்லைன் அம்சங்கலை அதன் ஆண்ட்ராய்டு கூகுள் ஆப்பில் கொண்டுவந்து புதுப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கூகுள் ஆப், இனி ஆப்லைன் தேடல்களை ஆதரிக்கும்.!

அதாவது இந்த மேம்படுத்தல் மூலம் நீங்கள் ஒரு இணைய இணைப்பு இல்லாமல் பயன்பாடு மூலம் கூகுள் தேடல்களை ரன் செய்ய முடியும். ஆப் ஆனது உங்கள் கேள்விகளை சேமித்து வைத்துக்கொள்ளும் பின்னர் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனம் எப்போது இணைய இணைப்பை பெறுகிறதோ அது தானாகவே உங்கள் தேடலுக்கான கண்டறியப்பட்டுள் முடிவை வழங்கும்.

இந்த புதிய அம்சமானது நீங்கள் விமான பயணம் செய்யும் பொது அல்லது வைஃபை சிக்னல் இல்லாத நேரம் ஆகிய தருணங்களில் மிக உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். உடன் இந்த கூகுள் ஆப் ஆனது திரைக்குப் பின்னால் வேலைசெய்து இணைய இணைப்பு மீண்டும் கிடைப்பதை கண்டறிந்து மற்றும் உங்கள் தேடல் முடிவுகளை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, இந்த ஆப் மூலம் தரவு பயன்பாடு அல்லது பேட்டரி ஆயுள் குறைவு ஏற்படுமோ என்ற கவலை பயனர்களுக்கு வேண்டாம் என்றும் இந்த ஆப் உங்கள் கருவியின் பேட்டரியை பாழாக்காது மற்றும் தரவு பயன்பாட்டில் குறைவான தாக்கங்கள் ஏற்படுத்தும் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட தேடல் முடிவுகளை வழங்கும் என்று கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்த அம்சத்தை அனுபவிக்க உங்கள் கூகுள் பயன்பாடானது சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பு கொண்டுள்ளதாக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க : பப்ளிக் வைபையை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Google app now supports offline searches. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்