அடுத்த வாரம் ரிலீசாகும் நெக்சஸ் கருவிகள்..!!

By Meganathan
|

கூகுள் நிறுவனத்தின் சார்பில் செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவிற்கான அழைப்பிதழ்களை அந்நிறுவனம் ஊடக நிறுவனங்களுக்கு அனுப்ப துவங்கி இருக்கின்றது. இந்நிகழ்வில் கூகுள் நிறுவனம் புதிய நெக்சஸ் மற்றும் க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட கருவிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.

கூகுள் நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்து ஏற்கனவே பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றது, அதன் படி எல்ஜி மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் புதிய நெக்சஸ் கருவிகளை தயாரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் புதிய கருவிகள் எல்ஜி நெக்சஸ் 5எக்ஸ் மற்றும் ஹூவாய் நெக்சஸ் 6பி என அழைக்கபடும் என்றும் கூறப்பட்டு வந்தது.

அடுத்த வாரம் ரிலீசாகும் நெக்சஸ் கருவிகள்..!!

இரு நெக்சஸ் கருவிகளும் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

கடந்த வாரங்களில் வெளியான சில தகவல்களின் படி எல்ஜி நிறுநவனம் தயாரிக்கும் புதிய நெக்சஸ் கருவி 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 808 பிராசஸர், 3ஜிபி ரேம், 12.3 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் 2700 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதோடு ஹூவாய் நிறுவனத்தின் நெக்சஸ் கருவி 5.7 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 12 எம்பி ப்ரைமரி கேமரா மற்ரும் 8 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் புதிய கருவிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ள நிச்சயம் காத்திருப்பத தவிற வேறு வழி இல்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
Google Announces September 29 Event; New Nexus Phones, Chromecast Expected. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X