ஐபோன் போட்டி : பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய கூகுள், முழு தகவல்கள்!

By Meganathan
|

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற விழாவில் கூகுள் நிறுவனம் தனது பிரான்டிங் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கருவிகளை அறிமுகம் செய்திருக்கின்றது. கூகுள் பிக்ஸல், கூகுள் பிக்ஸல் XL என இரண்டு கருவிகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் கூகுள் பிக்ஸல் ரூ.57,000 என்றும் இதற்கான முன்பதிவுகள் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்ஸல் கருவிகள் பிளிப்கார்ட் இணையதளம், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமா போன்ற ஆஃப்லைன் வர்த்தகர்களிடம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அக்டோபர் மாத இறுதியில் துவங்கும் எனக் கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டண்ட்

கூகுள் அசிஸ்டண்ட்

அதிகம் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே கூகுள் பிக்ஸல் மற்றும் கூகுள் பிக்ஸல் XL கருவிகள் கூகுள் அசிஸ்டண்ட் சேவைக் கொண்ட முதல் போன்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன. இந்தக் கருவியில் வழங்கப்பட்டிருக்கும் மற்ற சிறப்பம்சங்களை தொடர்ந்து பாருங்கள்..

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திரை

திரை

கூகுள் பிக்ஸல் கருவியில் 5.0 இன்ச் ஃபுல் எச்டி Amoled டிஸ்ப்ளேவும், கூகுள் பிக்ஸல் XL கருவியில் 5.5 இன்ச் குவாட் எச்டி Amoled டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டிஸ்ப்ளேக்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

கூகுள் பிக்ஸல் மற்றும் கூகுள் பிக்ஸ் XL கருவிகள் அலுமினியம் யுனிபாடி மற்றும் பின்புறம் பாலிஷ் செய்யப்பட்ட கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு கருவிகளிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், இரு கோர்கள் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் இரு கோர்கள் 2.15 ஜிகாஹெர்ட்ஸ் கொண்டுள்ளன.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரேம்

ரேம்

கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL கருவியில் 4 ஜிபி LPDDR4 ரேம் மற்றும் Pixel imprint கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

புகைப்பட அம்சங்களைப் பொருத்த வரை 12.3 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX378 சென்சார், PDAF, பெரிய f/2.0 அப்ரேச்சர் மற்றும் 1.55-மைக்ரான் பிக்ஸல்கள் கொண்டிருக்கின்றன. இரு கருவிகளிலும் 8 எம்பி முன்பக்க கேமரா சோனி IMX179 சென்சார், f/2.4 அப்ரேச்சர் மற்றும் 1.4-மைக்ரான் பிக்ஸல்கள் கொண்டுள்ளன.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மெமரி

மெமரி

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL கருவிகளானது 32 மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றன.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் கூகுள் பிக்ஸல் கருவிகளில் யுஎஸ்பி டைப்-சி மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சேவை மையம்

சேவை மையம்

கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களுக்கு 24*7 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உதவிக்குக் காத்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூபலம் பயனர்கள் இலவச எண் மூலம் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளைச் சரி செய்து கொள்ள முடியும். இதோடு இந்தியாவின் 30 நகரங்களில் சுமார் 54 சோதனை மையங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அறிமுகம்

அறிமுகம்

கூகுள் பிக்ஸல் அறிமுக விழாவில் கூகுள் நிறுவனம் டே டிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், 4K HDR கொண்ட க்ரோம்காஸ்ட், கூகுள் வை-பை போன்ற கருவிகளையும் அறிமுகம் செய்தது.

விலை

விலை

அமெரிக்காவில் 32 ஜிபி கூகுள் பிக்ஸல் விலை $649 இந்திய மதிப்பில் ரூ. 43,000 என்றும் 128 ஜிபி $749 இந்திய மதிப்பில் ரூ. 50,000 என்றும்; பிக்ஸல் XL 32 ஜிபி $769 இந்திய மதிப்பில் ரூ. 51,000, 128 ஜிபி மாடல் $869 இந்திய மதிப்பில் ரூ. 58,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கூகுள் பிக்ஸல் கருவிகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Google Announced Its First Google-Branded Phone Pixel Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X