உலகின் மிகப்பெரிய டேட்டா-சயிண்டிஸ்ட் 'கேகுல்' (Kaggle)உடன் கைகோர்த்தது கூகுள்

உலகின் மிகப்பெரிய டேட்டா-சயிண்டிஸ்ட் 'கேகுல்' (Kaggle)உடன் கைகோர்த்தது கூகுள்

உலகின் நம்பர் ஒன் தேடுதளம் என்று கூறப்படும் சியர்ச் இஞ்சின் நிறுவனமான கூகுள் உலகின் மிகப்பெரிய டேட்டா சயிண்டிஸ்ட் நிறுவனமான கேகுல் உடன் இன்று இணைந்துள்ளதாகவும், இனி இரு நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கூகுள் கிளவுட் நிறுவனத்தின் உயரதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய டேட்டா-சயிண்டிஸ்ட் 'கேகுல்' (Kaggle)உடன் கைகோர்த்தது

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கேகுள் நிறுவனம், இதுவரை 800,000க்கும் மேற்பட்ட டேட்டா மேதாவிகளை கொண்டுள்ளது. டேட்டா அனலிஸ் மற்றும் மிஷின் லேர்னிங் என்று கூறப்படும் மிஷின் செயல்படும் விதம் குறித்த ஆய்வுகளை செய்து வரும் இந்த நிறுவனம் மிக துல்லியமான ரிசல்ட் கொடுக்கும் தன்மை உடையது என்பதால் இந்தரிசல்ட் மூலம் பல நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை தக்க வைத்து கொள்கின்றன.

கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிளவுட் உயர் விஞ்ஞானி இதுகுறித்து கூறியபோது, 'கேகுள் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படுவது என்பது மிகச்சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கும் மக்களுக்கும் கொடுக்க வேண்டியது என்ற ஒரே நோக்கம்தான். இரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்த இணைப்பு ஒரு மைல்கல்

ரூ.1,999/-க்கு 4ஜி மற்றும் ரூ,2,999/-க்கு 4ஜி ஆண்ட்ராய்டு - மைக்ரோமேக்ஸ் அதிரடி.!

உலக அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள கேகுல், டேட்டா சயிண்டிஸ்ட் மற்றும் மெஷின் லேர்னிங் விஷயத்தில் ஜாம்பவானாக இருப்பதால் உலகில் உள்ள பல நிறுவனங்களுக்கு ஆலோசனை மற்றும் போட்டியாளர்களை சமாளிக்கும் திறன் ஆகியவைகளுக்கு அட்வைஸ் செய்து வருகிறது.

கூகுளுடன் இணைந்து கேகுல் தனது பணியை தொடரும்போது இன்னும் அதிகப்படியான பயன்களை அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி கூகுளின் வாடிக்கையாளர்களும், அவைகளை பயன்படுத்துவோர்களும் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இரு நிறுவனங்களின் இணைப்பில் கண்டிப்பாக இண்டர்நெட் உலகிலும், மிஷின் லேர்னிங் துறையிலும் ஒரு புதிய சகாப்தம் படைக்கும் என்பதில் ஐயமில்லை

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Google has acquired kaggle, the world's largest community of data scientists and machine learning enthusiasts
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்