பிப்ரவரி 27 முதல் ஜியோனி ஏ1 மற்றும் ஏ1 பிளஸ்.!

பிப்ரவரி 27 அன்று வெளியிடப்படுகிறது ஜியோனி ஏ1 மற்றும் ஏ1 பிளஸ் அதன் அம்சங்கள் விலை ஆகியன குறித்து ஓர் பார்வை.!

Written By:

சீன நிறுவனமான ஜியோனி தனது புதிய தயாரிப்பான ஜியோனி ஏ1 மற்றும் ஏ1 பிளஸ் ஆகியவற்றை இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள டபுள்யூஎம்சி நிகழ்வில் வெளியிடப்போகிறது.

குறிப்பாக ஏ1 ஜியோனி ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களும்,அதன் படங்களும் கசிந்துள்ளன.அவை குறித்த சில தகவல்கள் கீழே.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சீன நிறுவனம்:

ஜியோனி ஆனது ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கக்கூடிய சீன நிறுவனம் ஆகும்.இதற்கு முன்பாகவும் இது குறிப்பிடத்தகுந்த ஸ்மாட்ர்போன்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.அதிக விலையில்லாமல் எல்லோரும் வாங்கக்கூடிய அளவிலான விலையுள்ள மொபைல் போன்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம்.

ஜியோனி ஏ1 மற்றும் ஏ1 பிளஸ்:

இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புக்களான ஜியோனி ஏ1 மற்றும் ஏ1 பிளஸ் ஆகியவை இம்மாதம் இறுதியில் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் தனது இந்த புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வெளியிடப்போகிறது.

அம்சங்கள்:

இம்மாதம் இறுதியில் வெளியிடப்படப்போகும் இந்த ஸ்மார்ட்போன்களில் ஏ1 ஆனது 5.5 இன்ச் டிஸ்பிளே(1180x1920 பிக்ஸல்ஸ்),ஆண்ட்ராய்டு 7.0 நொவ்கட், 2.5 கொரில்லா கிளாஸ்,1.8 ஆக்டா கோர் மீடியா டெக் ப்ரொஸசர்,4ஜிபி ரேம் ஆகியவற்றைக்கொண்டு வெளிவரக்கூடும்.

கேமரா&பேட்டரி:

இந்த வகை மொபைல் போன்கள் 4010 எம்ஏஎச் வகை பாட்டரிகளையும்,13 எம் பி மெயின் கேமராவினையும்,16 எம்பி பிரண்ட் கேமராவையும் கொண்டிருக்ககூடும்.

விலை:

ஜியோனி ஏ1 மற்றும் ஏ1 பிளஸ் ஆகியவற்றில் ஏ1 ஆனது ரூ.22,500 இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் படிக்க

பிரீமியம் விலையில் இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா 6.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Gionee A1, A1 Plus to Launch on February 27 at MWC 2017; Images, Price, Specifications Leaked.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்