நிஜமாகவா..? 15 நிமிடங்களில் ஜியோ சரிபார்ப்பு மற்றும் சிம் ஆக்டிவேஷன்.?!

ரிலையன்ஸ் ஜியோ ஆதார் அட்டை இல்லாமல் பயனர்களின் மற்ற அடையாள ஆவணங்களை சரிபார்ப்பதில்லை இருந்தும் உடனடி சரிபார்ப்பு மற்றும் சிம் ஆக்டிவேஷன் நிகழ்த்த முடியும். எப்படி.?

Written By:

ரிலையன்ஸ் ஜியோ முழு தொடர்பு துறையிலும் போட்டியை உருவாக்கி விட்டுள்ளது என்றாலும், பயனர்கள் ஜியோ நெட்வர்க்கில் பல சிரமங்களை எதிர்கொண்டும் வருகின்றனர். ஜியோவில் சிம் ஆக்டிவவேஷன் தொடங்கி நெட்வொர்க் சிக்கல்கள் வரையிலான உண்மையில் பல பிரச்சினைகள் உள்ளன.

இம்மாதிரியான நிலையில் 15 நிமிடங்களில் ஜியோ சரிபார்ப்பு மற்றும் சிம் ஆக்டிவேஷன் நிகழ்த்தலாம் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முதல் பிரச்சனை

சிம் ஒன்றை கையில் பெற்றபின் ஜியோ பயனர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனையாக சிம் ஆக்டிவேஷன் திகழ்கிறது. ஜியோ வழங்கும் அற்புதமான சலுகைகளை அனுபவிக்க சிம் ஆக்டிவேஷன் விரைவில் நிகழ்த்த வேண்டும் அதற்கு பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் நிபந்தனைகள் பல உள்ளன.

வெரிஃபிகேஷன் மெஸேஜ்

பயனர்கள் தங்கள் ஜியோ சிம் கார்ட்டை செயல்படுத்த பல விவகாரங்களை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. அதாவது தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து வெரிஃபிகேஷன் மெஸேஜ் பெற வேண்டும் இல்லையெனில் அது ஜியோ சேவை துண்டித்தலுக்கு வழிவகுக்கும்.

ஆதார் அட்டை

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஆதார் அட்டை ஆதாரத்தை ஜியோ சிம் செயல்படுத்தும் செயல்பாட்டில் கட்டாய ஆவணமாக அறிவித்துள்ளது மற்றும் இல்லையெனில் சிம் செயல்படுத்தப்படாமல் போகலாம் அல்லது சரிபார்ப்பு செய்தி அனுப்பப்படாமல் போகலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டாக்குமெண்ட் ஸ்கேனர் ஆப்

இந்த சரிபார்ப்பு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக, ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஆதார் அட்டையை சொந்தமாக கொள்ளாதவர்களுக்காக வேறு ஆவண ஆதாரத்தை அதாவது டாக்குமெண்ட் ஸ்கேனர் ஆப் வழியாக மற்ற அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கும் வசதியை கொண்டு வர இருக்கிறது.

சுமையை குறைக்கும்

ஆனால் இந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் குறிப்பிட்ட ஆப் எப்போது, எப்படி செயல்படும் என்பதை பற்றிய தகவல்களை அளிக்கவில்லை. ஆனால் அது விரைவில் வெளிப்படுத்தபட்டு, அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் ஆவணங்கள் சரிபார்ப்பு மீதான சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Get Instant Verification and Activate Your Reliance Jio SIM in 15 Minutes. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்