நல்லா பாருங்க, இது பட்டாம்பூச்சி தானா.??

Posted by:

சக மனிதனை விட விளங்குகள் மற்றும் ஏலியன் எனப்படும் வேற்று கிரக வாசிகளின் மீது தான் மக்களுக்கு அன்பு அதிகம் என்று கூற வேண்டும். உலகம் முழுக்க பல்லாயிரம் கோடிகளை செலவழித்து வேற்றுகிரக வாசம் குறித்த ஆய்வு மற்றும் விளங்குகளுக்கு மாற்றாக இருக்கும் ரோபோட்களை தயாரிப்பதில் தான் மக்கள் இன்று ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆண்களை காப்பாற்றும் பிரத்யேக ரோபோட்..!!

அந்த வகையில் ஜெர்மன் நிறுவனமான ஃபெஸ்டோ விளங்குகளை போன்றே காட்சியளிக்கும் ரோபோட்களை தயாரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு கங்காரு போன்ற ரோபோட் ஒன்றை உருவாக்கிய அந்நிறுவனம் இம்முறை செய்திருக்கும ரோபோட் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விளங்குகள்

முன்னதாக கங்காரு, கடற்பறவை, டிராகன் பறவை, ஏர்ஜெல்லி போன்றவைகளை ஃபெஸ்டோ நிறுவனம் ரோபோட்களாக செய்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

பட்டாம்பூச்சி

அந்த வகையில் அந்நிறுவனம் இம்முறை பட்டாம்பூச்சிகளை ரோபோட்களாக செய்திருக்கின்றது.

காட்சி

பார்க்க அச்சு அசல் பட்டாம்பூச்சி போன்றே காட்சியளிக்கும் இந்த ரோபோட்கள் உண்மையான பட்டாம்பூச்சி போன்றே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா

தலையில் கேமரா, ஆப்டிக்கல் சென்சார் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்களை இந்த ரோபோட்கள் கொண்டிருக்கின்றன. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சர்க்யூட்கள் எந்நேரமும் வேளை செய்து கொண்டே இருக்கும்.

சக்தி

வயர்லெஸ் சார்ஜர் பொருத்தப்பட்டிருப்பதால் எங்கும் சுலபமாக இதனினை சார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

தாணியங்கி

மேலும் இவை தாணியங்கி முறையில் செயல்படும் என்றும் கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈமோஷன் பட்டர்ஃப்ளைஸ்

முன்பே உறுதி செய்யப்பட்ட் பாதையில் பயணிக்கும் திறன் கொண்டிருக்கின்றது. மேலும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஃப்ராரெட் கேமரா ஜிபிஎஸ் கருவியாகவும் பயன்படுகின்றது.

இறக்கை

20 இன்ச் இறக்கை கொண்ட இந்த ரோபோட் நொடிக்கு 2.5 மீட்டர் வரை பறக்க முடியும் என ஃபெஸ்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடியோ

ரோபோட் பட்டாம்பூச்சி எப்படி இயங்குகின்றது எந்பதை வீடியோ மூலம் பாருங்கள்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
German Company Creates Robotic Insects. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்