ஆப்பிளை 'துவம்சம்' செய்த சாம்சங்..!

Written By:

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் தனது இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் மீதான தன் முன்னணியை நீட்டித்து கொண்டுள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் கடந்த காலாண்டில் 77 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்று, கடந்த ஆண்டை விட 5.5 சதவீதம் விற்பனையை பதிவு செய்துள்ளது, என்ற ஆய்வுத்தகவலை அளித்துள்ளது ஐடிசி (சர்வதேச டேட்டா கார்பரேஷன்).

ஆப்பிளை 'துவம்சம்' செய்த சாம்சங்..!

மறுபக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் ஐடிசி தனது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது.

ஆப்பிளை 'துவம்சம்' செய்த சாம்சங்..!

கடந்த மார்ச் மாதத்தில் சாம்சங் வெளியிட்ட மேம்படுத்தப்பட்ட செயலி, மற்றும் வாட்டர் ப்ரூப்கொண்ட மாடல்களான கேலக்ஸி எஸ்7, மற்றும் எஸ் 7 எட்ஜ் தான் சாம்சங் நிறுவத்தின் இந்த முன்னணி முக்கிய காரணம் என்றும் ஐடிசி குறிப்பிட்டுள்ளது. ஆப்பிள் அதன் மிகவும் மலிவுவிலை ஐபோனான எஸ்இ-யை வெளியிட்ட போதிலும், கடந்த வருடம் போல ஈடுகொடுக்க முடியாமல் பலவீனமான விற்பனையை பதிவு செய்துள்ளது.

ஆப்பிளை 'துவம்சம்' செய்த சாம்சங்..!

மேலும் ஐடிசி ஆய்வின் அடுத்தடுத்த இடங்களில் சீனாவின் ஹவாய் மூன்றாவது இடத்திலும், ஒப்போ நிறுவனம் நான்காவது இடத்திலும், விவோ ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

மேலும் படிக்க :

ரிலையன்ஸ் புதுவரவு : ரூ.10,999க்கு 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!
செப்டம்பர் 12 இரண்டு மட்டும் தான் : இது தான் ஆப்பிள் திட்டமா??
போட்டியாளர்களை 'பந்தாடிய' ஹானர் 5சி-யின் ஐந்து சிறப்பம்சங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Galaxy S7, Galaxy S7 Edge Help Samsung Extend Lead Over Apple: IDC, Strategy Analytics. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்