இந்த வாரம் வெளியான டாப் 10 தொழில்நுட்ப கருவிகள்

By Meganathan

நீங்களும் தொழில்நுட்ப ப்ரியரா, இந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்று வரும் வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் பல தொழில்நுட்ப கருவிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவியும் எதிர்கால தொழில்நுட்பம் குறித்த உங்களது எதிர்பார்ப்பை அதிகமாக்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்த வகையில் பல கருவிகள் பட்டியலில் இருந்தாலும் அவைகளில் சிறந்த கருவிகளை மட்டும் தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். இந்த கருவிகள் உங்களை நிச்சயம் வியப்பூட்டும் என்பதை விட இதை பார்த்தால் உங்களுக்கு புரிந்து விடும் என்பது மட்டும் நிச்சயம்..

 எல்ஜி

எல்ஜி

எல்ஜி நிறுவனம் OLED 4K TV மற்றும் இரண்டு ட்ரம் கொண்ட வாஷிங் மெஷினை இந்த விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் எல்ஜியின் G Flex 2 ஸ்மார்ட்போனையும் வெளியிட்டது.

 

சாம்சங்

சாம்சங்

சாம்சங் நிறுவனம் சார்பில் எந்க ஸ்மார்ட்போனும் வெளியிடவில்லை மாறாக 4K கொண்ட SUHD டிவியை அதிக கலர் ஆப்ஷன்களை கொண்டு வெளியிட்டுள்ளது.

 சோனி

சோனி

ஜப்பான் நிறுவனமான சோனி 4K டிவி, 4K ஹான்டிகேம், ஆக்ஷன்கேம் மற்றும் புதிய வால்க்மேன் வகைகளை வெளியிட்டுள்ளது.

இசட்டிஈ (ZTE)

இசட்டிஈ (ZTE)

வைபை வசதி கொண்ட ப்ரோ 2 ஸ்மார்ட் எஹ்டி ப்ரொஜக்டர், ஆட்டோபோகஸ், ஆன்டி-க்ளேர், டச் ஸ்கிரீன் மற்றும் வீடியோ கான்பிரன்சிங் வசதிகளோடு வெளியிட்டுள்ளது இசட்டிஈ (ZTE) நிறுவனம்.

 மான்ஸ்டர்

மான்ஸ்டர்

மான்ஸ்ட்ர பூத்தில் வயர்லெஸ், வாட்டர் ப்ரூஃப் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் பல புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பானாசோனிக்

பானாசோனிக்

பானாசோனிக் நிறுவனம் முதல் 4K Blue-ray ப்ளேயர், ஹோம் மானிட்டரிங் சிஸ்டம் KX-HN6002W, டை ரிமோட் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவற்றை
அறிமுகப்படுத்தியுள்ளது.

குவால்காம்

குவால்காம்

LIFX நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் குவால்காம் வைபை மூலம் இயங்கும் ஸ்மார்ட் லைட்டிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஷார்ப்

ஷார்ப்

அக்வோஸ் க்ரிஸ்ட்ல் என்ற ப்ரேம்லெஸ் ஸ்மார்ட்போனை அதிக சிறப்பம்சங்களோடு அறிமுகப்படுத்தியுள்ளது ஷார்ப் நிறுவனம்.

இதோடு 85" 8K LCDயுடன் உலகின் பெரிய 4K அல்ட்ரா எஹ்டி எல்சிடி டிஸ்ப்ளே ஆகியிவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சைல்டு ஏஞ்சல்

சைல்டு ஏஞ்சல்

குழந்தைகளுக்கான இந்த கருவி பெற்றோர்களுக்கு பேருதவியாக இருக்கும். இந்த கருவி மூலம் குழந்தைகளின் நடவடிக்கைகளை வைபை மற்றும் ஜிபிஸ் வசதிகளை கொண்டு கண்கானிக்க முடியும்.

டிஷ்

டிஷ்

டிஷ் நிறுவனத்தின் 4K Joey கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எஹ்டி தொழில்நுட்பத்தை அனுபவிக்க முடியும் என்று தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

மேலும் ஸ்லிங் டிவியையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் லைவ் டிவி மற்றும் ஆன்லைன் வீடியோக்களை பார்க்க முடியும்.

 

 
English summary
Gadgets That Stole The Show in Las Vegas. Here you will find the list of best Gadgets That Stole The Show in Las Vegas.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X