மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் எதிர்பார்க்கப்படும் கேஜெட்கள்

By Meganathan
|

தொழில்நுட்ப சந்தையில் தினந்தோரும் எக்கச்சக்கமான கருவிகள் அறிமுகமாகின்றன, என்றாலும் அவைகளில் சில கருவிகள் தான் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வருகின்றன.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் வெளியாகும் என எதிரபார்க்கப்படும் சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

டொஷிபா

டொஷிபா

இந்தாண்டு நடைபெற்ற வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோட் பேசுவது, பாடுவது மற்றும் நடிக்கவும் செய்யும்.

3டி ப்ரின்டர்

3டி ப்ரின்டர்

மேக்கர்போட் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும் இந்த 3டி ப்ரின்டர் எவ்வித கம்ப்யூட்டர் மற்றும் மேக் கணினிகளுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

டிரோன்

டிரோன்

இன்ஸ்பையர் 1 குவாட்காப்டர் 4கே தொழில்நுட்பத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது.

பேரட் பாட்

பேரட் பாட்

செடி வளர்க்க பயன்படும் இந்த தொட்டி பல சென்சார்கள் கொண்டிருப்பதோடு ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் அப்ளிகேஷன்களை கொண்டு செடிகளை வளர்க்க உதகின்றது.

சைக்கிள் நேவிகேட்டர்

சைக்கிள் நேவிகேட்டர்

பயனங்களில் சரியான இடத்தை தெரிந்து கொள்ள இந்த நேவிகேட்டரை பயன்படுத்தலாம். இது ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து குரல் மூலம் வழியினை சொல்கின்றது.

வைப் எக்ஸ்டென்ஷன் செல்பீ

வைப் எக்ஸ்டென்ஷன் செல்பீ

இந்த கருவியை ஸ்மார்ட்போனில் இருக்கும் 3.5 எம்எம் ஜாக் உடன் இணைத்து செல்பீ எடுக்கும் போது ப்ளாஷ் லைட்டாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

கெவோ ஸ்மார்ட் லாக்

கெவோ ஸ்மார்ட் லாக்

க்விக்செட் கெவோ பூட்டானது ப்ளூடூத் மூலம் வீட்டின் பூட்டினை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை கொண்டே இயக்க வழிவகுக்கின்றது. இதற்கென வழங்கப்பட்டிருக்கும் கெவோ செயலியை ஐபோன், ஐபாட் டச் போன்ற கருவிகளில் பயன்படுத்த முடியும்.

கேனான் 7டி மார்க் II

கேனான் 7டி மார்க் II

இந்த டிஎஸ்எல்ஆர் கேமரா 20.2 எம்பி சென்சார் 16,000 ஐஎஸ்ஓ சப்போர்ட் கொண்டிருக்கின்றது.

ஹூப்சிலோன் சென்சோரியா சாக்ஸ்

ஹூப்சிலோன் சென்சோரியா சாக்ஸ்

கால்களில் அணியக்கூடிய இந்த சாக்ஸ் சென்சார் உதவியோடு நடக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஸ்மாரப்ட்போனில் தெரிவிக்கின்றது. எத்தனை கலோரி, எவ்வளவு வேகம், எத்தனை தூரம் கடக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ள உதவுகின்றது.

சாம்சங் எஸ்எஸ்டி டி1

சாம்சங் எஸ்எஸ்டி டி1

சாம்சங் நிறுவனத்தின் போர்ட்டபிள் SSD T1 பார்க்க சிறியதாகவும், அழகாகவும் இருப்பதோடு 250ஜிபி முதல் 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் மற்றும் யுஎஸ்பி 3.0 கொண்டிருக்கின்றது.

Best Mobiles in India

English summary
check out The Gadgets & Gizmos to Look Forward to in 2015. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X