தெறிக்க விடும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள்.!!

By Meganathan
|

உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கின்றது என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். இம்முறை ஸ்மார்ட்போன், கேஜெட்களை தவிர்த்து பல்வேறு நாடுகளும் ஆர்வத்துடன் தயாரித்து வரும் சில அதிநவீன ராணுவ ஆயுதங்களை பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

துப்பாக்கி வகைகள், எதிரிகளை தாக்க புதிய வகை தொழில்நுட்பங்களை கொண்டு இயங்கும் ஆயுதங்கள் சார்ந்த சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள். இவை எந்தளவு பயன்படுத்தப்படுகின்றது என்பதை தாண்டி ஆயுதங்கள் எப்படியெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கார்னர் ஷாட்

கார்னர் ஷாட்

துப்பாக்கி சூடுகளின் போது எதிர்பக்கம் அல்லது பக்கவாட்டில் இருப்போரை திரும்பி பார்த்து சுடுவது சற்றே ஆபத்தானதாகும். இந்த சூழலை எதிர்கொள்ளும் விதமாக கண்டறியப்பட்ட துப்பாக்கி வகை தான் கார்னர் ஷாட். இந்த வகை துப்பாக்கியானது மறுமுனையில் இருப்போரை தாக்க ஏதுவாக வளையும் தன்மை கொண்டதாகும்.

ஆக்டிவ் டினையல் சிஸ்டம்

ஆக்டிவ் டினையல் சிஸ்டம்

இலக்குகளை நெருப்பு மூலம் தாக்கும் திறன் கொண்ட அதிநவீன இயந்திரம் தான் ஆக்டிவ் டினையல் சிஸ்டம். இது மைக்ரோவேவ் போன்று செயல்பட்டு அதிக ப்ரீக்வன்ஸி திறன் கொண்ட வெப்ப கதிர்களை பரப்பும். இது மனித உடலில் இரண்டாம் நிலை தீ காயங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டதாகும்.

ரயில்கன்

ரயில்கன்

எலக்ட்ரோ மேக்னெடிஸம் முறையை பயன்படுத்தி ஒலியை விட ஏழு மடங்கு வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த அதிநவீன ஆயுதம் அமெரிக்க ராணுவம் தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

PHASR

PHASR

பெர்சனல் ஹால்டிங் மற்றும் ஸ்டிமுலேஷன் ரெஸ்பான்ஸ் ரைஃபிள் என அழைக்கப்படும் இந்த வகை ஆயுதமானது சிறிது நேரத்திற்கு பார்வை கோளாறுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகும். நவீன முறை லேசர் உதவியோடு இந்த துப்பாக்கி இயங்குவதால் சிறுது நேர பார்வை இழப்பை தவிற பேராபத்துகளை விளைவிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

HULC சூட்

HULC சூட்

எக்ஸோஸ்கெலிட்டன் போன்ற HULC சூட் வகைகள் ராணுவ வீரர்களை சுமார் 90 கிலோ எடையை சுலபமாக தூக்கி கொண்டு 10 மீட்டர் வேகத்தில் பயணிக்க வழி செய்யும்.

ஹெல்லட்ஸ்

ஹெல்லட்ஸ்

அதிநவீன லேசர் கதிர்களை கொண்டு எதிரிகளின் மிசைல், ராக்கெட் மற்றும் ப்ரோஜக்டைல்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது தான் ஹெல்லட்ஸ்.

செல்ஃப் கைடடு புல்லட்ஸ்

செல்ஃப் கைடடு புல்லட்ஸ்

இது ஒரு அதிநவீன ஸ்மார்ட் புல்லட் என்றும் கூறலாம். இலக்கை குறி வைத்து சுட்ட பின் பாதி வழியில் இலக்குகளை மாற்றியமைக்க முடியும்.

சோனிக் கனான்

சோனிக் கனான்

லாங்க ரேன்ஜ் அகௌஸ்டிக் டிவைஸ் என அறியப்படும் இந்த சோனிக் கனான்கள் அல்ட்ரா சவுன்டு மூலம் எதிரிகளை தாக்கும் திறன் கொண்டவையாகும்.

காம்பாட் ரோபோட்

காம்பாட் ரோபோட்

ஐரோபோட் நிறுவனம் தயாரிப்பில் உருவானது தான் ஃபையர் ஸ்டார்ம் எனும் ரோபோட். இது ராணுவ வீரரை போல் போர் களத்தில் சண்டையிடும் திறன் கொண்டதாகும்.

கிரீனேடு லான்ச்சர்

கிரீனேடு லான்ச்சர்

ஒரு சுற்றில் சுமார் 25எம்எம் கிரீனேடு ரவுன்டுகளை சுடும் திறன் கொண்டது தான் இந்த அதிநவீன XM25 வகை கிரீனேடு லான்ச்சர். இதனால் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில்

விரைவில்

இதே போல் உலகெங்கும் இதை விட பயங்கர ஆயுதங்கள் தொழில்நுட்ப உதிவியோடு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு ஆயுதங்கள் சார்ந்த தகவல்களுடன் மற்றொரும் ஓர் தொகுப்பு விரைவில் பார்ப்போம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Futuristic Hi tech Weapons You Won’t Believe that Are Real Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X