செயலி மூலம் நன்மை செய்த நண்பர்கள்..!!

Written By:

தொழில்நுட்பம் ஒரு வகையில் மக்களை அடிமையாக்குகின்றது என பரவலாக கூறப்பட்டு வந்தாலும், தொழில்நுட்பத்தை உற்று நோக்கினால் அது மக்களுக்கு நன்மையை விளைவிப்பதும் தெரிய வரும்.

அளவோடு இருந்தால் எதுவும் நன்மை தான், எல்லை மீறினால் எதுவும் ஆபத்தே, அந்த வகையில் நம் தேவைக்கு மட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தினால் அது அனைவருக்கும் நன்மையே..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

செயலி

உலகில் தொழில்நுட்பத்தின் மூலம் பல நன்மைகள் அரங்கேறி வரும் நிலையில் ஸ்மார்ட்போன் செயலி மூலம் காணாமல் போனவரை அவரது நண்பர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்காவின் ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வரும் மாணவரான ஜிம்மி ஹப்பர்ட் கடந்த வெள்ளி கிழமை முதல் காணாமல் போனதை அடுத்து அவரை தேடும் பணிகளில் அவரது நண்பர்கள் ஈடுப்பட்டு வந்தனர்.

செயலி

இதை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுப்பட்டிருந்த ஜிம்மியின் நண்பரான க்ரிஸ்டியன் பட்டால்கியா ஐபோன் செயலியான ஃபைன்டு மை ஐபோன் பயன்படுத்தி ஜிம்மி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

நினைவு

ஜிம்மி இறுதியாக காணாமல் போன இடத்தில் இருந்து ஏழு மைல் தொலைவில் ரயில் தண்டாவளத்தில் நினைவற்ற நிலையில் க்ரிஸ்டியன் மீட்டார்.

சிகிச்சை

சுய நினைவின்றி மீட்கப்பட்ட ஜிம்மி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதோடு அவருக்கு ஞாபக மரதி ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முதநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Friends Use App to Find Missing College Student. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்