ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் விலை ரூ.500 இல்லை, வெறும் ரூ.251 தானாம்..!

Written By:

இந்திய நிறுவனமான ரீங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது என்றும், நேற்று வெளியான தகவலின் அடிப்படையில் அதன் விலை ரூபாய் 500 என்றும் கூறப்பட்டது. இன்று வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்கீழ் அந்த ஸ்மார்ட்போனின் விலையானது வெறும் ரூ. 251 மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ப்ரீடம் 251 (Freedom 251) ஸ்மார்ட்போன் பற்றிய சிறப்பம்சங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது, அவைகளை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டிஸ்ப்ளே :

4 இன்ச் க்யுஎச்டி ஐபி டிஸ்ப்ளே (4-inch qHD IPS)

கேமிரா :

முன்பக்க கேமிரா : 0.3 எம்பி
பின்பக்க கேமிரா : 3.2 எம்பி (ஆட்டோ போகஸ்)

ரேடியோ :

மிக குறைந்த விலையில் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் ஆனது 3 ஜி ரேடியோ வையும் நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இன்டர்நெட் வசதிக்காக இந்திய 3ஜி நிறுவனங்களை ப்ரீடம் 251-ல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ப்ராஸசர் :

1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் ப்ராஸசர் (1.3GHz quad-core processor)
விலையின் அடிப்படையில் பார்க்கும் பொது இது மீடியாடெக் ப்ராஸசர் (Mediatek processor) என்று அனுமானிக்கப்படுகிறது.

மெமரி :

ரேம் : 1 ஜிபி
இன்டர்னல் மெமரி : 8 ஜிபி
32 ஜிபி வரை மெமரி கார்டு மூலம் நீட்டித்துக்கொள்ளலாம்.

பேட்டரி :

இதன் பேட்டரி ஆனது 1450எம்எஎச் மூலம் சக்தியூட்டப்படுகிறது.

வாரண்டி :

மொபைலுக்கு 12 மாதமும், பேட்டரி மற்றும் சார்ஜருக்கு 6 மாத கால வாரண்டியும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

முன்பதிவு :

வரும் பிப்ரவரி 18 ஆம் தேதியில் இருந்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவன வலைதளத்தில், ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனின் முன்பதிவு நடைபெற இருக்கிறது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Freedom 251 smartphone is priced at Rs 251. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்