நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவச ஃவைபை.!

நாடு முழுவதும் 115 ரயில் நிலையங்களில் இலவச வைபை சேவை வழங்கப்படுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.

By Ilamparidi
|

இப்போதைய சூழலில் இணையத்தின் பயன்பாடானது அதிகரித்து விட்ட சூழலில் அதனை மையப்படுத்தியே நமது வாழ்வின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவினுக்கு நமது வாழ்வின் தவிர்க்க இயலாததோர் விடயமாக இணையம் மாறிப்போய்விட்டது.

அதுமட்டுமன்றி,பெறுமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு,பணமில்லா பரிவர்த்தனை உள்ளிட்ட செயல்முறைகள் மேலும் இணையத்தினை அதிக அளவிலானோர் பயன்படுத்திடுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.பயணிகள் தமக்கு தேவையான விடயங்களை இணையம் வழியாக தெரிந்து கொள்வதற்கு மத்திய அரசின் ரயில்வே துறையானது நாடு முழுமைக்கும் 115 ரயில் நிலையங்களில் இலவச வைபை சேவையினை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.அதுகுறித்த மேலதிக தகவல்கள் கீழே..

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவச ஃவைபை.!

115 ரயில் நிலையங்களில்:

நேற்றைய பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது பூஜ்ய நேரத்தில் கேள்வி ஒன்றினுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடு முழுமைக்கும் 400 ரயில் நிலையங்களில் வைபை சேவை வழங்குகிற திட்டமானது ரயில்டெல் லிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவச ஃவைபை.!

முதல் பகுதியாக:

அதன் முதல் பகுதியாக தற்போது 50 லட்சம் பயணிகள் பயன்படுத்திடக் கூடிய வகையில் 115 ரயில் நிலையங்களில் இம்மாதம் முதல் இலவச வைபை சேவையானது வழங்கப்படுமென தெரிவித்தார்.இதனால் பயணிகள் மட்டுமன்றி மாணவர்களும் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவச ஃவைபை.!

ஓடும் ரயில்களில்:

மற்றுமோர் கேள்வியினுக்கு பதிலளித்த அமைச்சர் ஓடும் ரயில்களில் இலவச வைபை சேவை வழங்கப்படுவது குறித்த திட்டமும் உள்ளதாக தெரிவித்தார்.மேலும் தற்போது சில ரயில்களில் இத்தகைய சேவை நடைமுறையில் உள்ளதாகவும் வரக்கூடிய காலங்களில் அதிகப்படியான ரயில்களில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவச ஃவைபை.!

பெரிய:

உலகினில் இதுவே மிகப் பெரிய மற்றும் வேகமான வைபை சேவையை வழங்கக் கூடியதாக இருக்குமெனவும்,எல்லா பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

வரப்போகுது வாட்ஸ்ஆப் பழைய ஸ்டேட்டஸ் முறை.!

Best Mobiles in India

Read more about:
English summary
Free Wi-Fi Provided to 5 Million Passengers at 115 Railway Stations in February: Prabhu.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X